வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட தொடங்கி வைக்கலாம்! பிரகாஷ் ராஜ் சரியாக கேட்டார்.. கேஎஸ் அழகிரி
டெல்லி: வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட கொடி அசைத்து துவங்கி விடலாம். ஆனால், உங்களை தவிர வேறு யார் போனாலும் மணிப்பூரில் கலவரம் அடங்காது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சரியான கேள்வியை முன்வைத்ததாக கே.எஸ் அழகிரி கூறினார்.
டெல்லியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மோடி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். மற்ற கட்சிகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சியை பற்றி நாட்டை வளர்ப்பது பற்றி தேர்தல் பிரசாரத்தில் சொன்னால் மோடி பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன் என தனது பிரசாரத்தில் பேச ஆரம்பித்து இருக்கிறார்.

நாட்டில் ஒரே மதம் இல்லை, ஒரே இனம் இல்லை, ஒரே கலாசாரம் இல்லை, ஒரெ இறை வழிபாடு இல்லை, நிறைய மதங்கள் இருக்கின்றன. நிறைய மொழிகள் இருக்கின்றன. இந்தி வேறு, தமிழ் வேறு, குஜராத்தி வேறு, மலையாளம் வேறு. எல்லாவற்றிலும் கலாசாரம் இருக்கிறது. இறை வழிபாடு இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவுக்கு பொருந்தாது. எங்கேயுமே அது பொருந்தாது.
பல தரப்பு மக்கள் வாழ்கிற நாடுகளில் அது பொருந்தாது. ஆனால், பிரதமர் நாட்டின் பிரதான பிரச்சினைகளை விட்டுவிட்டு இந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். காங்கிரசும் மதசார்பற்ற சக்திகளும் அதை சரியான திசையில் எதிர்க்கும் பதில் கூறுவார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல்வதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறுகிறார்கள்.

ராகுல் காந்தியை போன்ற புரட்சியாளர், சீர்திருத்தாவாதி இதுக்கெல்லாம் அஞ்சுவது இல்லை. பிரதமர் மோடி போகவில்லை. குறைந்த பட்சம் நானாவது போக வேண்டும் என்று என நினைக்கிறார். பிரதமர் மோடியால் அமெரிக்கா போக முடிகிறது. ஆனால் மணிப்பூர் சென்று அமைதியை நிலை நாட்ட முடியவில்லை. நடிகர் பிரகாஷ் ராஜ் மிகவும் பொருத்தமாக சொன்னார்.
வந்தே பாரத் ரயிலை ஸ்டேஷன் மாஸ்டர் கூட கொடி அசைத்து துவங்கி விடலாம். ஆனால், உங்களை தவிர வேறு யார் போனாலும் மணிப்பூரில் கலவரம் அடங்காது. கலவரத்தை அடக்குவதற்கான வழியையும் கண்டுபிடிக்க முடியாது. செய்ய வேண்டியதை செய்யாமல் தேவையற்றதை செய்கிறீர்களே இது நியாயமா என்று கேட்டார்? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லட்டும்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications