மத்திய ஆயுதப் படைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!
டெல்லி: சி.ஐ.எஸ்.எப், எல்லை பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை ஆகிய மத்திய படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்களில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய உள்துறை அமைச்சம் முடிவு செய்துள்ளது.
இந்திய ராணுவத்தில் சேருவதற்கு அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் திட்டமாகவே இது கொண்டுவரப்பட்டது. அதாவது அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி செய்ய முடியும்.

4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.
சம்பளத்தை பொறுத்தவரை முதல் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரமும் கடைசி ஆண்டில் அதாவது 4-வது ஆண்டில் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது. சம்பளத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு சேவா நிதியாக மத்திய அரசு பங்களிப்புடன் பணி நிறைவு செய்யும் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 11.7 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
வரி எதுவும் பிடித்தம் செய்யப்படாது என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அளித்தது. எனினும் அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல, எதிர்க்கட்சிகளும் அக்னிபாத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் அக்னிபாத் திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது போன்றது என கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், அக்னிபாத் வீரர்களுக்கு மேஜர் சலுகை ஒன்றை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது மத்திய பாதுகாப்பு படைகளில் நிரப்பப்படும் கான்ஸ்டபிள் பணியிடங்களில் 10 சதவீதம் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அது போக உடல் தகுதி தேர்விலும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படைகளில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications