ஞாபகம் இருக்கா "அயோத்தி தீர்ப்பு".. ஓட்டலில் பார்ட்டி.. குரூப் போட்டோ.. எம்பி ரஞ்சன் கோகாய் ஓபன்டாக்
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுயசரிதை வெளியிடப்பட்டுள்ளது
டெல்லி: "அயோத்தி தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்று இரவு, நாங்கள் எல்லாரும் ஒரு குரூப் போட்டோ எடுத்து கொண்டோம்.. தாஜ் ஓட்டலுக்கு போனோம்.. சைனிஸ் சாப்பாடு சாப்பிட்டோம்" என்று சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் பல வருஷங்களாகவே நடந்து வந்தது..
இறுதியில் கடந்த 2019 நவம்பர் 9-ம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

போட்டோ
இந்த அமர்வில் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூத், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த தீர்ப்பு பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.. இந்நிலையில், ரஞ்சன்கோகாய் குறித்த ருசிகர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த தீர்ப்பு வழங்கிய பிறகு, நீதிபதிகள் எல்லாரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துள்ளார்கள்.. பிறகு தாஜ் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டுள்ளார்கள்.. இவர்களை எல்லாம் ஓட்டலுக்கு அழைத்து போனதே ரஞ்சன்கோகாய்தானாம்.. இதையெல்லாம் தன்னுடைய சுயசரிதையில் அவர் தெரிவித்தள்ளார்.. அந்த புத்தகத்துக்கு ஜஸ்டிஸ் ஃபார் தி ஜட்ஜ் (Justice for the Judge) என்று பெயர்..

புத்தகம் வெளியீடு
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான கோகாய், மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.. இந்த சுயசரிதை புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.. அந்த புத்தகத்தில்தான் பல்வேறு தகவல்களை ரஞ்சன் பகிர்ந்து கொண்டுள்ளார்.. தன்மீதான பாலியல் குற்றச்சாட்டு, அயோத்தி தீர்ப்பு, தனக்கு கிடைத்த எம்பி பதவி என ஏகப்பட்ட விஷயங்களை அதில் வெளிப்படையாகவே எழுதி உள்ளார்.. சுயசரிதை என்றாலே, தங்கள் சுய வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி அப்பட்டமாக வெளிப்படுத்தக்கூடிய புத்தகம் என்பதால், ரஞ்சன் அந்த வகையில் நிறைய தகவல்களை இதில் ஓபனாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீதிபதிகள்
"2019 நவம்பர் 9ம் தேதியன்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகு, அசோக சக்கரத்திற்கு கீழே, கோர்ட் வளாக எண் 1க்கு வெளியே உள்ள நீதிபதிகள் கேலரியில் ஒரு போட்டோ செஷனுக்கு பொது செயலாளர் ஏற்பாடு செய்தார்... எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்.. அன்று சாயங்காலம் வழக்கை விசாரித்த அமர்வு நீதிபதிகளுக்கு நைட் டின்னருக்கு அழைத்து சென்றேன்.. தாஜ் மான்சிங் ஹோட்டலுக்கு போனோம்.. அங்கு கிடைக்கும் சிறந்த சைனீஷ் உணவுகளை சாப்பிட்டோம்.. அப்பறம் ஒயின் பாட்டிலை நாங்கள் அனைவரும் ஷேர் செய்து சாப்பிட்டோம்.. நான் இவர்களில் சீனியர் என்பதால் செலவு மொத்தத்தையும் நானே ஏற்றுக்கொண்டேன்.

குடியரசு தலைவர்
குடியரசுத் தலைவர் என்னை பரிந்துரை செய்த காரணத்தால், தயங்காமல் மாநிலங்களவை எம்பி பதவியை ஏற்றுக் கொண்டேன். ஏனென்றால், இந்த விஷயத்தை தவறாக நான் எடுத்து கொள்ளவில்லை. ஆனால் இதுபற்றி பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்... ரபேல் மற்றும் ராம் ஜென்மபூமி வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு நன்றி கடனாகவே, இந்த எம்பி பதவி வழங்கப்பட்டது என்ற கருத்துக்கள் எல்லாம் பிறகுதான் தெரியவந்தது..

கருத்துக்கள்
இப்படி ஒரு கருத்துக்களை அந்த பதவி ஏற்படுத்தும் என்று நான் கொஞ்சமும் நினைவிக்கவில்லை. மக்கள் தங்கள் எண்ணங்களை இப்படி வெளிப்படுத்துவார்கள் என்று முன்னமேயே எனக்கு தெரிந்திருந்தால், அந்த வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு 2 முறையாவது யோசித்திருப்பேன்... நான் இதைபற்றி நன்றாக யோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும்.." என்று தன் சுயசரிதையில் விரிவாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுதியுள்ளார் ரஞ்சன் கோகாய்..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications