நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகும் திஹார் சிறை- துக்கிலிடும் ஊழியர் வருகை- நாளை ஒத்திகை!
டெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20-ந் தேதி தூக்கிலிடுவதற்கு டெல்லி திஹார் சிறை தயாராகி வருகிறது. 4 பேரையும் தூக்கிலிடும் ஊழியர் பவான் ஜல்லாத் திஹார் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். நாளை சிறையில் ஒத்திகை நடைபெற உள்ளது.
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றம் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு சட்ட காரணங்களை முன்வைத்து 4 பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை பெற்று வருகின்றனர்.

இன்னொருபக்கம் நிர்பயாவின் தாயார் உள்ளிட்டோர் குற்றவாளிகளை தூக்கிலிடும் வரை ஓய்வதில்லை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவண் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார்சிங் ஆகியோருக்கு வரும் 20-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இவர்களைத் தூக்கிலிடுவதற்காக சிந்தி ராம் என்ற பவான் ஜல்லாத் திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். டெல்லி திஹார் சிறையில் நாளை சிந்தி ராம், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை மேற்கொள்ள இருக்கிறார்.
பவன் ஜல்லாத் குடும்பத்தினர் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக பணியாற்றினர். தற்போது பவான் ஹல்லாத், 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர். தற்போதும் கூட நிர்பயா கொலை குற்றவாளிகள் தங்களுக்கான தூக்கு தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்ஷய் குமார் மீண்டும் கருணை மனு
இதனிடையே நிர்பயா கொலை குற்றவாளி அக்ஷ்யகுமார் 2-வது முறையாக கருணை மனுவை அனுப்பியுள்ளார். இம்மனுவை டெல்லி அரசு, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications