இந்தியாவுக்கு ஹேப்பி நியூஸ்.... கொரோனா 2-வது அலைக்கு நோ சான்ஸ் ... மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1 கோடியை கடந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு ஏற்படாது என சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி ஓருவேளை கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்ட்டாலும், அது முதல் அலையை போல் வலுவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் முன்பு இருந்ததை விட கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்களின் இந்த அறிவிப்பு மக்களுக்கு ஆறுதலாக அமைந்துளளது.

படுத்தியபாடு
இந்தியாவில் கொரோனா வைரஸ் மக்களை ஒரு பாடு படுத்தி விட்டது. இதனால் பொருளாதார பாதிப்பு, அனைத்து துறைகளும் முடக்கம் என சில மாத காலம் நாடே முடங்கியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியை தூண்டியுள்ளது. ஆனாலும் முன்பை இருந்ததைபோல் அல்லாமல் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு, உயிரிப்புகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு வாய்ப்பு இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளது பொதுமக்களை ஆறுதல்படுத்தி உள்ளது.

பரவாயில்லை
இது குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபல தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறியதாவது:- இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் ஒரு நாளைக்கு 93,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த நிலையுடன் ஒப்பிடும்போது தற்போது தினமும் 25,500 கொரோனா பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. இதன்மூலம் கொரோனாவின் மோசமான நிலை முடிந்துவிட்டது என்று நம்புகிறேன்.

ஏற்படாது
நாட்டில் பண்டிகை காலங்கள் (தசரா முதல் தீபாவளி வரை) மற்றும் சில மாநிலங்களில் தேர்தல் நடந்து விட்டது. இதனால் கொரோனா 2-வது அலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை. இரண்டாவது அலை ஏற்பட்டு இருந்தால் நாட்டில் 300-400 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று பாதிப்புகள் இருக்கும். வெளிப்படுத்தப்படாத மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொடர்ந்து தொற்றுநோய்க்கு ஆளாக நேரிடும்.

தடுப்பூசி மிகவும் நல்லது
இதனால் அடுத்த சில ஆண்டுகளில் சீரான இடைவெளியில் கொரோனா சிறிய உச்சங்களை தொடும். நல்ல கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு இதனை திறம்பட கட்டுப்படுத்தும். அப்படி கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டாலும், அது முதல் அலையைபோல் பாதிப்பை உண்டாக்காது. பிரபல மருத்துவ விஞ்ஞானி டாக்டர் ககன்தீப் காங் கூறுகையில், கொரோனா தொற்று முதல் முறையாக காணப்பட்டதைப் போல விரைவாக செயல்பட வேண்டும், அதனால் உச்சமும் உயர்ந்ததாக இருக்காது. கொரோனா பிரச்சினை இன்னும் முழுமையாக நீக்கவில்லை. ஆனாலும் மேற்கத்திய நாடுகளில் காணப்பட்டதைப் போல இரண்டாவது அலையை காண்போம் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

அதிக பாதிப்பு
பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் கே கே அகர்வால் கூறுகையில், இந்தியாவில் இன்னும் 30-40 சதவீதம் மக்கள் கொரோனா பாதிப்புடன் உள்ளனர். இந்தியா, அர்ஜென்டினா மற்றும் போலந்து ஆகிய 3 நாடுகள்தான் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன.

கட்டுப்படுத்த முடியும்
இந்த நாடுகளில் இரண்டாவது அலை காணப்படவில்லை. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது உச்சம் இருக்காது. இந்த மாத இறுதிக்குள் இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து சுமார் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டால், மார்ச் 25 க்குள் இந்த நோயை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று கூறி உள்ளார்.

கவனம் தேவை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்றுநோய்களின் தலைவரான டாக்டர் சமிரன் பாண்டா கூறுகையில்,கொரோனா பாதிப்பில் சில மாநிலங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயனுள்ள பாதுகாப்பு வழிமுறைகள அதனை கட்டுப்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications