அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம்.. மிகப்பெரிய நற்செய்தி.. பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து வர்த்த ஒப்பந்தத்தை இறுதி செய்து புதிய திட்டத்தை அறிவித்துள்ளனர். இது இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. திருப்பூர், கோவை, சென்னை, நாமக்கல், ஈரோடு என உற்பத்தி சார்ந்த பல்வேறு நகரங்களுக்கு ஊக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவினை பார்க்கும் முன்பு, அதன் நன்மைகளை பார்ப்போம்.

அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன
முதலில், $30 டிரில்லியன் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,700 லட்சம் கோடி) மதிப்புள்ள அமெரிக்கச் சந்தை இப்போது இந்தியத் தயாரிப்புகளுக்குப் பெரிய அளவில் கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இதுவரை அமெரிக்காவுக்குப் பொருட்களை அனுப்பும்போது அதிக வரி செலுத்த வேண்டியிருந்தது.
பூஜியம் வரி
ஆனால், இனிமேல் ஜவுளி, ஆடை, தோல் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இன்னும் சில முக்கியமான பொருட்களுக்கு, அதாவது உயிர் காக்கும் மருந்துகள் (Generic Pharma), வைரங்கள் மற்றும் விமான உதிரிபாகங்களுக்கு வரியே கிடையாது (0%). வரி குறையும்போது, உலகச் சந்தையில் நம் நாட்டுப் பொருட்களின் விலை குறையும்; இதனால் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.
யாரெல்லாம் பலன் அடைவார்கள்?
ஏற்றுமதி அதிகரிக்கும் போது, அதை உற்பத்தி செய்ய இந்தியாவில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இது நம் இளைஞர்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் நல்ல வருமானத்தைத் தரும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சிறிய அளவில் தொழில் செய்பவர்களும் இனி அமெரிக்காவிற்குத் தங்கள் பொருட்களைத் தடையின்றி அனுப்ப முடியும். இது கோவை, திருப்பூர் மாதிரியான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள நகரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை
நம் நாட்டு விவசாயிகளின் நலனில் அரசு மிகுந்த அக்கறை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அரிசி, கோதுமை, சோளம் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணர்திறன் மிக்க விவசாயப் பொருட்களுக்குப் பாதிப்பு வராத வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மற்ற விளைபொருட்களுக்கான புதிய சந்தை வாய்ப்புகளும் உருவாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா
இந்த ஒப்பந்தம் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரும், முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்திருந்தார். அதனை டேக் செய்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட் பதிவில் கூறுகையில், "இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு நற்செய்தி!
மோடி ட்வீட்
நமது இரு பெரும் நாடுகளுக்கு இடையே ஓர் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான வரைமுறை குறித்து நாம் உடன்பாடு கண்டிருக்கிறோம். நமது நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவுகளில் தனிப்பட்ட ரீதியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக அதிபர் ட்ரம்ப் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
இந்த வரைமுறையானது நமது நெருக்கமான உறவால் வளர்ந்து வரும் ஆழம், நம்பிக்கை மற்றும் வேகத்தைப் பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள், தொழில்முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் , மீனவர்கள் மற்றும் பலருக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுவதன் மூலம் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஸ்டார்ட் அப்பை ஊக்குவிப்போம்
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே ஸ்டார்ட் அப்பை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளன. இந்த வரைமுறையானது நமக்கிடையிலான முதலீடு மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை மேலும் ஆழமாக்கும். மேலும், இது நெகிழ்வான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதுடன் உலகளாவிய வளர்ச்சிக்கும் பங்களிக்கும். 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்லும் வேளையில், எதிர்காலத்தை நோக்கிய, நமது மக்களை வலுப்படுத்தும் மற்றும் பரஸ்பர வளத்திற்குப் பங்களிக்கும் உலக அளவில் இணைந்து செயல்படுதல் உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை











Click it and Unblock the Notifications