டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#ResignModi ஹேஷ்டேக் பதிவுகள் முடக்கம்.. அடடா தெரியாம பண்ணிட்டோம்... ஃபேஸ்புக் நிறுவனம் "விளக்கம்"!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா 2-ம் அலையை தடுக்க முடியாமல் திணறும் பிரதமர் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட #ResignModi ஹேஷ்டேக் பதிவுகள் தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    திடீரென முடக்கப்பட்ட Resign Modi ஹேஷ்டேக்.. ஏன்? Facebook கொடுத்த விளக்கம்

    சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் அவ்வப்போது டிரெண்டிங்காவது வாடிக்கை. #GobackModi ஹேஷ்டேக்குகள் பல ஆண்டுகளாக டிரெண்டிங்கில் இருப்பவை. ஒருகட்டத்தில் உலகளாவிய டிரெண்டிங்கில் இடம்பிடித்தவை.

     புரோகிதரை தரதரவென இழுத்து.. புரோகிதரை தரதரவென இழுத்து.. "அரெஸ்ட் பண்ணுங்க".. ஆர்டர் போட்ட கலெக்டர்.. ஆக்‌ஷன் எடுத்த முதல்வர்

    மனித பேரவலம்

    மனித பேரவலம்

    தற்போது கொரோனா 2-ம் அலை பரவலை பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு சரியாக கையாளவில்லை. இதனால் இந்தியாவில் மனித உயிர்கள் பேரழிவை சந்தித்து வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என பேரவலம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    #ResignModi ஹேஷ்டேக்.

    #ResignModi ஹேஷ்டேக்.

    ஆனாலும் எல்லாமும் சரியாக இருப்பதாக மத்திய பாஜக அரசும் பிரதமர் மோடியும் காட்டிக் கொள்கின்றனர். இதனால் அதிருப்தி அடைந்தவர்கள் உருவாக்கியதுதான் #ResignModi ஹேஷ்டேக். ஃபேஸ்புக்கில் இந்த #ResignModi உருவாக்கப்பட்ட சிறிது நேரத்தில் மளமளவென பதிவுகள் கொட்ட தொடங்கிவிட்டன.

    மோடிக்கு எதிரான ஹேஷ்டேக் நீக்கம்

    மோடிக்கு எதிரான ஹேஷ்டேக் நீக்கம்

    ஒருகட்டத்தில் திடீரென #ResignModi ஹேஷ்டேக் காணாமல் போனது. மத்திய பாஜக அரசுதான் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்து #ResignModi ஹேஷ்டேக்கை நீக்க வைத்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து #ResignModi ஹேஷ்டேக் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

    தெரியாமல் நடந்தது-ஃபேஸ்புக்

    தெரியாமல் நடந்தது-ஃபேஸ்புக்

    இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், #ResignModi ஹேஷ்டேக்கை மத்திய அரசின் நெருக்கடியால் முடக்கவில்லை. அந்த ஹேஷ்டேக் தவறுதலாகவே முடக்கப்பட்டது. #ResignModi ஹேஷ்டேக் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

    English summary
    Facebook said that #ResignModi Temporarily Blocked By Mistake.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X