"உண்மை.. மிகைப்படுத்துதல்.. மர்மம்".. வேக்சின் கொள்கையை ஒரே வரியில் புட்டு புட்டு வைத்த ப.சி.. நச்!
டெல்லி: இந்தியாவில் உள்ள 18+ வயது கொண்ட எல்லோருக்கும் டிசம்பர் 2021க்குள் வேக்சின் போட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 37,63,81,853 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 30,30,83,011 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 7,32,98,842 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெறும் 12 லட்சம் பேருக்கு மட்டுமே இந்தியாவில் வேக்சின் போடப்பட்டது. நேற்று 40 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டது. இன்று பல்வேறு மாநிலங்களில் வேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு
நாடு முழுக்க இன்று டெல்லி, ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் பெரும்பாலான மாவட்டங்களில் வேக்சின் மையங்கள் மூடப்பட்டுவிட்டன. டெல்லியில் நேற்று 36,310 பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டது. அங்கு சராசரியாக 1 லட்சம் + வேக்சின் போடப்பட்ட நிலையில் நேற்று 36 ஆயிரமாக இது குறைந்தது.

டெல்லி
இன்று டெல்லியில் வேக்சின் போட கோவிட்ஷீல்ட் இல்லாத காரணத்தால் முகாம்கள் 90% மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வேக்சின் கொள்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்விட்டில், ஒடிசாவில் இன்று 30 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் வேக்சின் இல்லை என்று ரிப்போர்ட் வந்துள்ளது.

ஒடிசா
ஒடிசாவில் ஆளும் பிஜேடி அரசு பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அரசு. வேக்சின் தட்டுப்பாடு இல்லை என்று விமர்சனங்களை புறந்தள்ளிய பாஜக அரசு இப்போது இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது. வேக்சின் தட்டுப்பாடு உள்ளது என்பதே "உண்மை". அதிக வேக்சின் உற்பத்தி என்பதை "மிகைப்படுத்துகிறார்கள்". வேக்சின் ஏற்றுமதி என்பது இன்னும் "மர்மமாக" இருக்கிறது.

கஷ்டம்
இந்தியாவில் உள்ள 18+ வயது கொண்ட எல்லோருக்கும் டிசம்பர் 2021க்குள் வேக்சின் போட முடியும் என்பது வெறும் ஆடம்பர பேச்சு. வேக்சின் குறித்த உண்மையை இந்தியாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா மக்களுக்கு தெரிவிப்பாரா? என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications