Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

85 வயது முதியவர் வீட்டில் வேலைக்கார பெண் செய்த செயல்.. இனி மறக்கவே மாட்டார்.. நம்பிக்கையால் சோதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் வீட்டில் வேலை செய்து வரும் பெண் தனது கூட்டாளிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் அனுப்பி மிரட்டி பணம், நகைகள், விலை உயர்ந்த வாட்ச்சுகளை அள்ளிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது? யாரெல்லாம் உதவினார்கள்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி நியூ ப்ரண்ட்ஸ் காலனியில் 86 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கட்டட கலைஞராக பணியாற்றி ஓய்வில் உள்ளார். வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

enforcement directorate news

இந்நிலையில் தான் கடந்த 11ம் தேதி திடீரென்று அவரது வீட்டுக்குள் 3 பேர் நுழைந்தனர். அவர்கள் தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறினர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை பிடுங்கி வைத்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி, ''சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதனால் வீட்டை சோதனை நடத்த உள்ளோம்'' என கூறி சோதனை நடத்தினர். அப்போது விலை உயர்ந்த வாட்சுகள், தங்க நகைகள், ரொக்கபணத்தை அள்ளி சென்றனர். இருப்பினும் அமலாக்கத்துறை என்று சோதனை நடத்தியவர்கள் மீது சந்தேகம் கிளம்பியது. அவர்கள் அணிந்திருந்த ஆடை, காட்டிய அடையாள அட்டை, சோதனை நடத்திய விதம் உள்ளிட்டவை சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் அந்த 3 பேர் அமலாக்கத்துறையை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், அவர்கள் அமலாக்கத்துறை பெயரில் ஏமாற்றி கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மொத்தம் 350 சிசிடிவி கேமராக்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது அந்த ஏரியாவில் இருந்த செல்போன் எண்களையும் போலீசார் டிராக் செய்தனர்.

அப்போது சில முக்கிய தகவல்கள் கிடைத்தது. குறிப்பாக அவர்கள் வந்து சென்ற கார் பற்றிய முழுவிவரத்தை போலீசார் திரட்டினர். அதோடு அந்த கார் காசியாபாத்தை சேர்ந்த வைஷாலி என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வைஷாலியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் நகை, பணத்தை பறிகொடுத்த நபரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வரும் 40 வயது நிரம்பிய ரேகா தேவிக்கும், வைஷாலிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் வேலைக்கார பெண் ரேகா தேவி தான் அமலாக்கத்துறை போல் நடித்து பணம், நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேகா தேவ, வைஷாலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து தங்க நகைகள், 7 வாட்ச்சுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரெய்டு போன 3 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி வடகிழக்கு மண்டல டிசிபி ஹேமந்த் திவாரி கூறுகையில், ''வழக்கில் ரேகா தான் முக்கிய நபர். இவர் தான் வீட்டில் உள்ள விஷயங்களை எல்லாம் தெரிவித்து கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இந்த வழக்கில் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் பணியாற்றி வரும் பிரகாஷ், முன்னாள் ராணுவ வீரர்கள் மணிஷ், உப்தேஷ் சிங் தாபா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடிவருகிறோம்'' என்றார்.

சினிமாக்களில் தான் போலீஸ், அமலாக்கத்துறை போல் நடித்து பணம், நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் டெல்லியில் அது நேரடியாக நடந்துள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+