பிரபல பெண்ணின் "லிவிங் டூ கெதர்".. கை கால்களை கட்டி.. பால்கனியில் வைத்து.. அதிர்ந்த ஆக்ரா
பால்கனியில் இருந்து பிரபலமான பெண்ணை வீசி எறிந்து கொன்றுள்ளனர்
டெல்லி: கை, கால்களை கட்டி பால்கனியில் இருந்து தூக்கி வீசி கொன்றுள்ளனர் ஒரு இளம்பெண்ணை.. இதனால் ஆக்ராவே அதிர்ந்து போயுள்ளது.
பிரபலமான அந்த பெண்ணின் பெயர் ரித்திகா சிங்.. 30 வயதாகிறது.. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர்.. அங்குள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் 4வது மாடியில் குடியிருந்து வந்தார்.
யூடியூப், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்தவர்.. இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு, ஆகாஷ் கவுதம் என்பவருடன் திருமணம் நடந்தது.. ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

வெள்ளிக்கிழமை
இதற்கு பிறகு, விபுல் அகர்வால் என்ற இளைஞருடன் ரித்திகா சிங், ஒன்றாக வாழ ஆரம்பித்தார்.. அப்போதுதான், இந்த அப்பார்ட்மென்ட்டுக்கு குடிவந்தனர்.. லிவிங் டு கெதரில்' வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, ஆகாஷ் கவுதம், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் ரித்திகாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு நடந்ததாக தெரிகிறது.. இந்த தகராறில்தான், விபுல் அகர்வாலை பாத்ரூமில் அடைத்து பூட்டியுள்ளனர்..

ரித்திகா சிங்
பிறகு, ரித்திகாவின் கை, கால்களை கட்டி பால்கனியில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்... அதாவது 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துவிட்டார் ரித்திகா. இதனிடையே, விபுல் அகர்வாலின் அலறல் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து கேட்டு கொண்டே இருக்கவும், அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர்.. அப்போதுதான், ரித்திகா சிங் சடலத்தை கண்டு அதிர்ந்தனர்.. உடனடியாக தாஜ்கான்ச் போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து, விசாரணையை ஆரம்பித்தனர்..

எஸ்கேப்
கொலை வழக்கும் பதிவு செய்து, ஆகாஷ் மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர்.. மேலும் 2 பேர் எஸ்கேப் ஆகிவிட்ட நிலையில், அவர்களை தேடி வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டே, கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் ரித்திகா.. சட்டப்படி விவாகரத்து பெற்ற பிறகுதான், விபுலுடன் ஒன்றாக வாழ ஆரம்பித்துள்ளார்.. சம்பவத்தன்று வீட்டிற்குள் நுழைந்த, ஆகாஷ் கவுதம் கும்பல், இந்த ஜோடியை சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளது..

பாத்ரூம் - பால்கனி
அதற்கு பிறகுதான் பாத்ரூமுக்குள் விபுலை தூக்கி எறிந்துள்ளது.. ரித்திகாவின் கைகளை கயிற்றால் கட்டி, அதன்பிறகே பால்கனியில் இருந்து, கீழே தூக்கி வீசியதால், கைகள் கட்டப்பட்ட நிலையில்தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ரித்திகா. இப்போது, ரித்திகா சிங் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.. ரித்திகா சிங் எந்நேரமும் சோஷியல் மீடியாவிலேயே மூழ்கி இருப்பாராம்.. கிட்டத்தட்ட 44 ஆயிரம் ஃபோலோயர்களை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது..

லிவிங் டூ கெதர்
இதைதவிர, "பேஷன், உணவு மற்றும் பயண ஆலோசனைகளை" சோசியல் மீடியாவின் வழியாக மேற்கொண்டு வந்துள்ளார்.. கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றதற்கு இதுதான் காரணமாம்.. அதற்கு பிறகு தனியாக வசித்து வந்த நிலையில், ஃபேஸ்புக் மூலமாக விபுல் அகர்வால் அறிமுகமாகி, அதற்கு பிறகு காதலிக்க துவங்கி உள்ளனர். விவாகரத்து செய்துவிட்ட பிறகும், இன்னொருவருடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தியதால், ஆகாஷ் கவுதம் ஆத்திரத்தில் இருந்து வந்ததாகவும், அதனாலேயே கொடூர கொலை வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications