தோனி வீடியோவில் அந்த ஒரு போட்டோ.. இந்திய கிரிக்கெட்டை உலுக்கிய நாள்.. இதை பகிரவும் ஒரு மனசு வேண்டும்
டெல்லி: தனது ஓய்வு அறிவிப்பை நேற்று வெளியிட்ட கிரிக்கெட் வீரர் தோனி, இது தொடார்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
Recommended Video
கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் தற்போது தோனி தனது ஓய்வு முடிவை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .
இனி ஒருநாள் மற்றும் டி20, டெஸ்ட் என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார்.

ஓய்வு அறிவிப்பு
தோனி தனது ஓய்வு அறிவிப்பையே மிகவும் வித்தியாசமாக வெளியிட்டு இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். கடைசி கிரிக்கெட் போட்டியை விளையாடி அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை. செய்தியாளர் சந்திப்பை நடத்தி அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை. இன்னும் போக பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் போஸ்ட் எதுவும் போட்டு அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை.

போஸ்ட் செய்தார்
வெறுமனே தனது இன்ஸ்டா பக்கத்தில் ''இத்தனை நாட்கள் உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி.. நான் 19.29 மணி அளவில் இருந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன், என்று தோனி போஸ்ட் செய்துள்ளார். அதோடு தோனி வீடியோ ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். தோனி கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் இதில் இடம்பெற்று இருக்கிறது.

சாதனை விஷயம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தோனி தன் வாழ்க்கையில் சாதனையாக கருதும் விஷயங்களை மட்டும் குறிப்பிடவில்லை. தோனி டக் அவுட்டில் வெளியானது. முதல் ரன் அவுட் என்று பல முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார். அணியின் கேப்டனாக முதல் முறை கோப்பை வாங்கியது என்று பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் உலகக் கோப்பை 2011ல் இவர் அடித்த சிக்ஸர் போட்டோ இதில் இல்லை.

அந்த புகைப்படம்
தோனி இந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் பலரின் மனதையும் உருக்கி உள்ளது.2007 உலகக் கோப்பையில் இந்த வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் நாடு முழுக்க கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் தாக்கப்பட்டது. கொடும்பாவி எரிக்கப்பட்டது. தோனியின் புகைப்படமும் எரிக்கப்பட்டது.

பாதிதான்
இந்த புகைப்படங்கள் பெரிய வைரலாகி அளவில் கிரிக்கெட் வீரர்களை மனதளவில் பாதித்தது. இந்த புகைப்படத்தைதான் தோனி தனது வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தில் தோனியின் முகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எரிய கூடிய அந்த புகைப்படத்தை தோனி தனது பேர்வெல் வீடியோவில் பகிர்ந்து உள்ளார்.

கிரிக்கெட் நேசம்
தோனியின் இந்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பாருங்கள்.. இவர் தனது ஓய்வை கூட சொந்த ஸ்டைலில் அறிவித்து இருக்கிறார். ரசிகர்கள் தன் புகைப்படத்தை கொளுத்திய புகைப்படத்தை கூட அவர் தனது வீடியோவில் சேர்த்து இருக்கிறார். அவர் கிரிக்கெட்டை எவ்வளவு நேசித்து இருந்தால் இப்படி செய்து இருப்பார் .. உண்மையில் அவர் கிரேட்தான், என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications