பார்வையற்ற பூசாரி சொன்ன வார்த்தை.. மலைத்து நின்ற சுதா மூர்த்தி.. தமிழக கோயிலில் இப்படியொரு சம்பவமா?
டெல்லி: இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த தகவலானது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.. சுதா மூர்த்தி அப்படியென்ன சொன்னார்?
நம்முடைய நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸை துவக்கியவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி ஆவார்.. நம்முடைய ஐடி துறையானது, சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல இந்த இன்ஃபோசிஸ் மிக முக்கிய காரணமாகும்..

நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றாலும்கூட, தன்னுடைய மனைவி சுதா மூர்த்தியுடன் இணைந்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.. இந்த தம்பதியினரின் எளிமையானது, அனைவரையும் வியக்க வைக்கக்கூடியது..
புத்தகங்கள்: சமீபத்தில்கூட, இவர்கள் 2 பேருமே தங்கள் மகள், பேரக்குழந்தைகளுடன் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல், பெங்களூரில் சாலையோர கடைகளுக்கு செல்வதும், ரோட்டோரத்தில் விற்கப்படும் புத்தகங்களை வாங்குவதும் மீடியாக்களில் வீடியோக்களாக வெளிவந்து ஆச்சரியத்தை கிளப்பியிருந்தது.
இதில், சுதா மூர்த்தி.எழுத்தாளராகவும், சமூக சேவகராகவும், நன்கொடையாளராகவும் விளங்கி வருகிறார்.. தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து, பல்வேறு விஷயங்களை சுதா மூர்த்தி தெரிவித்தும் வருகிறார். அப்படித்தான் ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததை சுதா மூர்த்தி உருக்கமாக தெரிவித்திருந்ததை, எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கோயில் வருகை: ஒருமுறை தமிழ்நாட்டுக்கு சுதா மூர்த்தி காரில் வந்துள்ளார்.. அப்போது, குக்கிராமம் ஒன்றின் வழியாக வரும்போது, திடீரென சுதா மூர்த்தியின் கார் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டது.. காரை சரிசெய்யும்வரை, பக்கத்திலிருக்கும் கோயிலில் இருங்கள் என்று கார் டிரைவர் சொல்லி உள்ளார்.
உடனே, அந்த குக்கிராமத்திலிருந்த கோயிலுக்கு சுதா மூர்த்தி சென்றிருக்கிறார். அங்கு பார்வையற்ற பூசாரியும் அவரது மனைவியும் இருந்துள்ளனர்... ஆனால், அவர்களிடம் போதுமான வசதிகள் இல்லை.. மிகவும் எளிமையான முறையில், எந்தவிதமான வசதியுமே இல்லாமல் இருந்துள்ளனர்.. தங்களுடைய கோயிலுக்கு யாரோ ஒரு பெண்மணி வந்துள்ளார் என்பதை அறிந்ததுமே, பார்வையற்ற பூசாரியும், அவரது மனைவியும், அன்புடன் வரவேற்றுள்ளனர்..
காணிக்கை: கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்துள்ளார் பூசாரி.. உடனே சுதா மூர்த்தி தன்னுடைய காணிக்கையாக 100 ரூபாயை வழங்கியிருக்கிறார். மேலும், அந்த தம்பதியினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.20,000 அனுப்பி வைப்பதாக பூசாரியிடம் சுதா மூர்த்தி சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த பார்வையற்ற பூசாரி, அதை வேண்டாமென்று பணிவுடன் மறுத்துவிட்டாராம்.
அம்மா, நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது.. ஆனால், உங்களிடம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தவறை உங்கள் வாழ்க்கையில் மறுபடியும் செய்யாதீர்கள்.. நீங்கள் தரும் இந்த பணம் எங்கள் நிலைமையை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு சுமையாக மாறிவிடும். இப்போது என்னையும் என்னுடைய மனைவியையும் இந்த குக்கிராமத்தினரே நன்றாக நன்கு கவனித்து கொள்கிறார்கள்.
மரணம்: அதிக பணம் என்னிடம் இருப்பது தெரிந்தால், நான் இறந்துவிட வேண்டும் என்று கிராமத்தினர் நினைக்கக்கூடும். அந்தப் பணத்தை என்னுடைய மரணத்துக்குப் பிறகு பெறலாம் என்றுகூட நினைக்கலாம். இப்போது எங்களிடம் இருப்பதே போதும்.. உங்களிடம் இருப்பதை நினைத்து, அமைதி கொள்ளவும் அதை அங்கீகரிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாராம்.
பூசாரி சொன்ன இந்த வார்த்தைகள், சுதா மூர்த்திக்கு, வாழ்க்கையின் நிஜத்தை மறுபடியும் நினைவூட்டியது போல் இருந்திருக்கிறது.. உண்மையான செல்வம் என்பது பணம், பொருள் அல்ல, தன்னிடம் இருப்பதை மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் என்பதை பூசாரி கூறிய வார்த்தைகள் மூலம் தான் அறிந்து கொண்டதாக சுதா மூர்த்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.பார்வையற்ற பூசாரி பேசியதை கேட்டு வாயடைத்து போய் நின்றுவிட்டாராம் சுதா மூர்த்தி.
வைரல் போஸ்ட்: நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரான சுதாமூர்த்தியையே, வாயடைத்து போகச்செய்த பார்வையற்ற பூசாரி யாரென்று தெரியவில்லை.. ஆனால், இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications