நிர்மலா சீதாராமன் தந்த சர்ப்ரைஸ்.. மினிமம் பேலன்ஸ் இருக்கா? இல்லையா? ஜன் தன் யோஜனாவில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (PMJDY) என்பது, அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, மலிவு விலையில் ஓய்வூதியம் போன்ற நிதிச்சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான நிதிச்சேர்க்கைக்கான தேசிய திட்டமாகும்.

minimum balance Nirmala Sitharaman

கடந்த 2014, ஆகஸ்ட் 15ம் தேதி, ஜன் தன் யோஜனா திட்டத்தினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்கள் பத்தாயிரம் வரை ஓவர் ட்ராஃப்ட் மூலம் கடன் பெற்றுகொள்ளலாம்.. 2000 ரூபாய் வரை எந்தவித நிபந்தனைகள் இல்லாமலும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

தகுதிகள்: ஆனால், பணம் பெறுவதற்கு உங்களது ஜன் தன் கணக்கானது துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 6 மாதம் ஆகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் 2000 ரூபாய் வரை மட்டுமே ஓவர் ட்ராஃப்ட் பெற முடியும்.. 65 வயது உடையவர்கள் ஜன் தன் கணக்கு வைத்திருந்தால் மேற்கண்ட சேவைகளை பெற முடியும்..

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல்ட் பென்ஷன் யோஜனா, மைக்ரோ யூனிட் டெவலப்மென்ட் அண்ட் ரீபைனான்ஸ் ஏஜென்சி வங்கி ஆகிய திட்டங்களை பெறுவதற்கு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்துள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவர்.

ஆதார் அட்டை: ஆதார் அட்டை இருந்தாலே இந்த திட்டத்தில் இணையலாம்.. பிறகு இதற்காக தரப்படும் ஏடிஎம் கார்டு வைத்து, நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும், பணம் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஒரு லட்சம் ரூபாய் வரை விபத்துக்கான காப்பீடு, முப்பதாயிரம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது. அத்துடன், ஆயுள் காப்பீட்டுக்கான சந்தா தொகையை அரசே செலுத்துகிறது.

இந்த ஜன் தன் யோஜனா திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வருடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், "பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ், 50.70 கோடி பயனாளிகளின் கணக்குகளில் சுமார் 206,781.34 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ஜீரோ பேலன்ஸ்: மொத்தம் 50 கோடி ஜன் தன் கணக்குகளில், 56 சதவீத கணக்குகள் பெண்களுடையதாகும்.. 67 சதவீத கணக்குகள் கிராமப்புற மற்றும் இரண்டாம் தர நகர்ப்புறங்களில் தொடங்கப்பட்டவையாகும்..

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, பொதுத் துறை வங்கிகள் "ஜீரோ பேலன்ஸ்" கணக்குகளை வழங்குவதால் அவை அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று ஒரு சாரார் கூறியிருந்தனர். ஆனால், இந்தக் கணக்குகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் பணம் இருக்கிறது" என்று நிதியமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மீண்டும் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அபராதம்: கடந்த 5 ஆண்டுகளில், "மினிமம் பேலன்ஸ்" எனப்படும் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்காக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, பொதுத்துறை வங்கிகள், 8,500 கோடி ரூபாய் அபராதம் வசூலித்ததாக, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ராஜ்யசபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்..

நிதியமைச்சர் சொல்லும்போது, "வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கு நிதிச்சேவைகளை வழங்குவதற்காக துவங்கப்பட்ட ஜன்தன் யோஜனா மற்றும் ஏழை மக்களுக்கான அடிப்படை சேமிப்பு திட்ட கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற வகையான கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கவில்லை என்றால் மட்டுமே வங்கிகள் அபராதம் விதிக்கின்றன'' என்றார்.

டபுள் மகிழ்ச்சி: வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பிரதமரின் இந்த திட்டம் மூலம் ரூ.10,000 வரை எடுக்கலாம் என்ற நடைமுறை உள்ளநிலையில், ஜன்தன் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் கிடையாது என்று நிதியமைச்சர் அறிவித்திருப்பது, வாடிக்கையாளர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+