டெல்லியிலிருந்து புறப்படும் விவசாயிகள்.. போராட்டம் வாபஸ்.. முடிவுக்கு வந்தது ஓராண்டு போராட்டம்
டெல்லி: விவசாயிகளின் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளதால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து டெல்லியிலிருந்து கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகிறார்கள்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் மீது போடப்பட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகளை திரும்ப பெற மத்திய மாநில அரசுகள் ஒப்புக் கொண்டதை அடுத்து விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி டெல்லி எல்லையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.

ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறும் தெரிவித்தார்.
அதே போல் வேளாண் சட்டங்கள் கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து போராட்டத்தின் போது விவசாயிகள் மீது புனையப்பட்ட வழக்குகள், இறந்த விவசாயிகளுக்கான இழப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தனர். இந்த நிலையில் விவசாய சங்கங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதன்படி அவர்களது கோரிக்கைகளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
எனினும் அந்த அறிக்கை இவர்களது கோரிக்கைகள் முழுமையாக இல்லை என்பதால் நேற்று போராட்டம் வாபஸ் பெறும் திட்டத்தை விவசாயிகள் கைவிட்டுவிட்டு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என அறிவித்தனர். வெறும் வெள்ளைத்தாளில் கையெழுத்து போட்ட கடிதத்தை வைத்து ஒன்று செய்ய முடியாது. அரசு லெட்டர் பேடில் எழுதி கையெழுத்திட்டால் மட்டும் அது முக்கியத்துவம் பெறும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் மீது போடப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்தது.
மேலும் அவர்கள் கேட்டபடி அரசு லெட்டர் பேடில் கடிதமானது இன்றைய தினம் விவசாய சங்கங்களுக்கு இன்று கொடுக்கப்படும். இதை வைத்து இன்றைய தினம் பிற்பகல் 12 மணிக்கு விவசாய சங்கங்கள் சிங்கு எல்லையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டனர். இதையடுத்து அங்கு போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. பஞ்சாப் விவசாயிகள் நேராக அமிருதசரஸ் பொற்கோவிலுக்கு சென்று போராட்டம் வெற்றியடைந்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications