அசராத விவசாயிகள்.. டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடல்.. போக்குவரத்து மாற்றம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் தொடர்ந்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 11 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

சிங்கு, திக்ரி எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி அமைத்து, அங்கேயே தங்கி சமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நூறாவது நாளான இன்று, குண்ட்லி - மானேஸர்-பல்வால் அதிவேக விரைவுச்சாலையை இன்று 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் தொடர்ந்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. சில்லா எல்லை போக்குவரத்து திறந்திருக்கும். அதே வேளையில், காசிப்பூர் எல்லை டெல்லியில் இருந்து காஸியாபாத் செல்லும் போக்குவரத்துக்கு மட்டுமே திறந்திருக்கும்.
உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லி நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் காசிப்பூர் எல்லையைக் கடந்து செல்ல முடியாது. அதற்கு பதில் ஆனந்த் விஹார், டி.என்.டி, லோனி மற்றும் அப்சரா எல்லைகளை கடந்து செல்லும் மாற்று வழித்தடங்களை தேர்வு செய்யுமாறு டெல்லி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான நுழைவு மற்றும் எக்ஸிட் இடங்கள், சிங்கு, திக்ரி, ஆச்சந்தி, பியாவ் மணியாரி மற்றும் சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
ஆகவே, லம்பூர், சஃபியாபாத், பல்லா மற்றும் சிங்கு போன்ற மாற்று வழிகள் வழியாக பயணிக்க வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். முகர்பா சவுக் மற்றும் ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்தை போலீசார் திருப்பி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications