ஓயப்போவதில்லை.. கோரிக்கை நிறைவேறாமல் விவசாயிகள் வீடு திரும்ப போவதில்லை.. ராகேஷ் திகைத் அறிவிப்பு
டெல்லி: விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீடு திரும்ப மாட்டார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத், திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
விவசாய போராளிகளின் ஹீரோவாக மாறியுள்ளவர் ராகேஷ் திகைத். இன்று விவசாயிகள் நடத்திய 3 மணி நேர சக்கா ஜாம் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் கூடியிருந்த விவசாயிகளிடம் உரையாற்றினார் ராகேஷ் திகைத்.

"எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் வீடு திரும்ப மாட்டோம்" என்று அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
"3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2ம் தேதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு அவகாசம் அளித்துள்ளோம். இதன் பின்னரும் அரசு இறங்கிவராவிட்டால், அடுத்தகட்ட போராட்டத்திற்கு திட்டமிடுவோம். பேச்சு வார்த்தைக்கு வாங்க என்று அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம்" என்று அவர் மேலும் கூறினார்.
3 சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தீர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளது, ஆனால் விவசாயிகள் மத்திய அரசுடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்துவோம் என கூறிவிட்டனர். இந் நிலையில் பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளதால், இப்பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சர்வதேச அளவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications