டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேளாண் சட்டங்களை நீக்குவதே நிரந்தர தீர்வு.. டெல்லி சலோ விவசாயிகள் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: வேளாண் சட்டங்களை நீக்குவதே நிரந்தர தீர்வு என டெல்லி சலோ விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்கள்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து அதை ரத்து செய்யக் கோரி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 11 ஆவது நாளாக இனறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு 5 முறை விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டது.

Farmers says that Centre should abort Farm laws

குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. ஆனால் மற்ற வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

தீர்வு இல்லையெனில் 6 மாசமானாலும் சரி.. இங்கேயே இருப்போம்.. குளிரெல்லாம் பிரச்சினையில்லை.. விவசாயிகள்தீர்வு இல்லையெனில் 6 மாசமானாலும் சரி.. இங்கேயே இருப்போம்.. குளிரெல்லாம் பிரச்சினையில்லை.. விவசாயிகள்

இதனால் வரும் 9-ஆம்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் 8-ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

தற்போது நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சியினர் என விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளார்கள். இந்த நிலையில் 9ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை நீக்குவதாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

English summary
Farmers says that Centre should abort Farm laws which it passes in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X