டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரமாகும் போராட்டம்... நாடு முழுவதும் 18-ம் தேதி ரெயில் மறியல்... விவசாயிகள் அதிரடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வருகிற 18-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரெயில் மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 14-ம் தேதி நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Exclusive: சசிகலாவை சந்திப்பது பற்றி முடிவெடுக்கவில்லை... ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஓபன் டாக்..!Exclusive: சசிகலாவை சந்திப்பது பற்றி முடிவெடுக்கவில்லை... ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஓபன் டாக்..!

 விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

 டிராக்டர் பேரணி

டிராக்டர் பேரணி

இதற்கிடையே டெல்லியில் குடியரசு தினம் அன்று நடந்த டிராக்டர் பேரணியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. பேரணி பாதை மாறியதால் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லியே பதற்றமாக இருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 போராட்டத்தை தீவிரமாக்க முடிவு

போராட்டத்தை தீவிரமாக்க முடிவு

டெல்லியின் திக்ரி உள்ளிட்ட பல்வேறு எல்லைப்பகுதியில் போராட்டம் தொடந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் சார்பில் கூட்டம் நடந்தது. இதில் இந்த போராட்டங்களை அடுத்தகட்டமாக தீவிரப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது .

 ரெயில் மறியல்

ரெயில் மறியல்

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வருகிற 18-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரெயில் மறியலில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 12 முதல் ராஜஸ்தானில் அனைத்து சாலை சுங்கச்சாவடிகளையும் வாகனங்களை இலவசமாக விடுவிக்க முடிவு செய்துள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 14-ம் தேதி நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்பு நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ம்யுக்தா கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

English summary
Farmers across the country have decided to go on a rail strike from 12 noon to 4 pm on the 18th demanding the repeal of the Agriculture Act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X