ஸ்டேன் சுவாமி இயற்கையாக மரணமடையவில்லை.. இது நிறுவன கொலை.. சக கைதிகளின் குடும்பத்தினர் அறிக்கை
டெல்லி: பழங்குடியினர் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிராவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த சம்பவம், "நிறுவன கொலை" (இன்ஸ்ட்டிடியூஷனல் மர்டர்) என்று எல்கர் பரிஷத் வழக்கில் கைதானவர்கள் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
எல்கர் பரிஷத் வழக்கில் போராளி ஸ்டேன் சுவாமி, எழுத்தாளர் வரவர ராவ், ஹேனி பாபு, மகேஷ் ராவத், வக்கீல்கள் சுரேந்திர கட்லிங், சுதா பரத்வாஜ், முன்னாள் பேராசிரியர் சோமா சென், சாகர் கோர்கே, ரமேஷ், ஜோதி ஜகதீப், அருண் பெர்ரேய்ரா, வெர்னோன் கோன்சல்வெஸ், ரோனா வில்சன் மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் கடந்த வருடம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
ஸ்டேன் சுவாமி தலோஜா சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு உடல்நலப் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், எல்கர் பரிஷத் சம்பவத்தில் கைதானவர்களின், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிறுவனக் கொலை
பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்து அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் மிகவும் துடித்துப் போய் இருக்கிறோம். இது இயற்கையான மரணம் கிடையாது. இது ஒரு புனிதமான ஆத்மா மீது நடத்தப்பட்ட நிறுவன கொலை. இதை நிகழ்த்தியது அரசு.
ஜார்கண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட தனது வாழ்க்கை முழுவதையும் பழங்குடியினர் உடன் கழித்தவர் ஸ்டேன் சுவாமி. அவர்களது நியாயமான உரிமைகளுக்காகவும் அந்த நிலத்தில் அவர்களின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடிய ஸ்டேன் சுவாமி இப்படி ஒரு மரணத்தை தழுவி இருக்கக்கூடாது. பழிவாங்கும் நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டு இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது.

எல்லோருக்காகவும் பாடுபட்டார்
ஸ்டேன் சுவாமியின் மோசமான உடல்நிலை பற்றி தெரிந்திருந்தும் அவர் தனக்காக மட்டும் வாதாடவில்லை. சிறைச்சாலையில் இவரைப்போல பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சிறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனது திடமான மனதால் தைரியம் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக கைதிகளுக்காக அவரது மனம் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தது.

ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு காரணம்
பல சிறைக்கைதிகள் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருவதாக தனது கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார். ஸ்டேன் ஸ்வாமி மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் அதே நேரத்தில், சிறை நிர்வாகத்தின் மெத்தனம், நீதிமன்றங்களில் மாறுபட்ட உத்தரவுகள், மோசடியான விசாரணை அமைப்புகள் ஆகியவைதான் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு காரணம் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Recommended Video

சிறையில் கொரோனா
பலமுறை ஸ்டேன் சுவாமி தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் விடுதலை செய்ய வழக்கு தொடர்ந்தபோது தேசிய விசாரணை அமைப்பு ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கைகள் சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பிறகு தான் அவர் கொரோனா நோயால், பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது .

கவனிப்பு இல்லை
மேலும், கை மற்றும் உடல் நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்டேன் சுவாமி தனக்கு ஸ்ட்ரா மூலம் உணவு உட்கொள்ள வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டார். ஆனால் நான்கு வாரங்கள் கழித்துதான் உறிஞ்சும் குழாய் மற்றும் டம்ளர் அவருக்கு கொடுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை வைத்துதான் அவரது குடும்பத்தார் மற்றும் சில எதிர் கட்சியினர், இது நிறுவன கொலை என்று குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications