வந்தது ஒரு அறிவிப்பு.. பாஜகவை சுற்றிக்கொண்ட கட்சிகள்.. அதானியை விடலையே.. அடுத்தடுத்த விமர்சனங்கள்
பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினம் குறித்து சிவசேனா தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளது
டெல்லி: உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினமாகக் கொண்டாடுமாறு விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் வெளியிட்டுள்ளதையடுத்து, அதற்கு கண்டனங்களும், எதிர் கருத்துக்களும் கிளம்பி உள்ளன.
பிப்ரவரி 14-ம் தேதி பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினத்தை கொண்டாடுமாறு விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையும் வெளியாகி இருந்தது.. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் முறையான ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பசுமாடுகள்
"பசுமாடுகள்தான் இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என நமக்கு தெரியும்... பசு நம்மை வாழவைக்கும் நம் வளத்தை குறிக்கும்... பசுக்களை காமதேனு எனவும் கோமாதா என அழைப்பதற்கு காரணம் மனித சமூகத்திற்கு பசு தாய் போல் செயல்படுகிறது. மேற்கத்திய நாட்டு கலாச்சாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாச்சாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது.

பிப்ரவரி 14
பசுக்களில் பல பலன்கள் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். நம் தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நல்ல சக்தி பரப்பும் வகையில் இந்நாளை கொண்டாடுவோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைதான் சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது..

புனிதமான பசு
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், "பாஜகவிற்கு அதானி ஒரு புனிதமான பசு. அதனால், அவர்கள் தங்கள் புனித பசுவை கட்டிப்பிடித்து மற்ற பசுக்களை காதலர் தினத்தில் கட்டிப்பிடிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் நாங்கள் பசுவை கோமாதாவாக மதிக்கிறோம், எங்கள் பாசத்தைக் காட்ட குறிப்பிட்ட நாள் எதுவும் தேவையில்லை என்று பதிலடி தந்துள்ளார். ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றிய மோசடிகளை வெளியிட்டதில் இருந்தே, தேசிய அரசியல் தகிக்க தொடங்கி உள்ளது.. எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்விகளை எழுப்ப, பாஜகவோ பதிலளிக்க முடியாமல் திணறி வருவதாக தெரிகிறது..

வெங்கடேசன்
இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.. இது தொடர்பான அமளி காரணமாக நடப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.. இப்படிப்பட்ட சூழலில், அதானியை குறிப்பிட்டு சிவசேனா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மதுரை எம்பி சு.வெங்கடேசனும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்.. "இந்தியாவில்












Click it and Unblock the Notifications