டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2023-24ம் ஆண்டு மத்திய பட்ஜெட்.. 5 பெரும் எதிர்பார்ப்புகள் என்னென்ன? இவைதான் ரொம்ப முக்கியம்!

மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக பட்ஜெட்டில் இது தொடர்பான சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Google Oneindia Tamil News

டெல்லி: 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 5 துறைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்

5 எதிர்பார்ப்புகள்

5 எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கும் 5 முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு.

வருமான வரி சலுகை - வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை பல வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பாக பட்ஜெட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக பட்ஜெட்டில் இது தொடர்பான சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தன்னை மிடில் கிளாஸ் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மிடில் கிளாஸ் மக்களுக்கான சலுகைகளை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் - கொரோனாவிற்கு பின்பாக ரியல் எஸ்டேட் துறை மீண்டு வர தொடங்கி உள்ளது. இந்த வருட பட்ஜெட்டில் அந்த துறைக்கு என்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். வரி குறைப்பு, ஸ்டாம்ப் டூட்டி கட்டணம் குறைப்பு, கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி குறைப்பு போன்றவை முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றன. அதேபோல் வீட்டு லோன் வட்டி விகிதம் குறைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச வீட்டிற்கான தொகை தற்போது 45 லட்சம் என்று குறிப்பிட்டு அதற்கு மட்டும் சலுகைகள் வழங்கபடுகிறது. இந்த சலுகைகளை 75 லட்சம் ரூபாய் வீடுகள் வரை கொடுக்க வேண்டும்,

மருத்துவத்துறை

மருத்துவத்துறை

நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் செப். 2022 வரை மருத்துவ துறையில் அந்நிய முதலீடு 20 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது . கடந்த 5 வருடங்களில் மருத்துவ துறையில் அந்நிய முதலீடு 5 மடங்கு உயர்ந்து உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. மொத்த மருத்துவ முதலீடு 40.6 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. இதையடுத்து இந்த வருடம் மருத்துவ துறைக்கான முதலீடு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், மத்திய மருத்துவ கல்லூரிகள் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ரயில்வேத்துறை

ரயில்வேத்துறை

ரயில்வே - மத்திய பட்ஜெட்டுடன் இன்று ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்படும். ரயில்வே டிக்கெட் விலை குறைப்பு. புதிய ரயில் அறிவிப்புகள். வந்தே பாரத் வழிதட அதிகரிப்பு. அதிவேக ரயில் தொடர்பான அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் தென்னிந்திய நாடுகளுக்கு குறைவான ரயில்வே திட்டங்களே அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் தென்னிந்தியா மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

உற்பத்தி - நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில் இந்தியாவில் 141.4 லட்சம் கோடி செலவில் 89,151 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5.5 லட்சம் கோடி மதிப்பிலான 1009 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பட்ஜெட்டில் உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலிசிகள், சலுகைகள், திட்டங்கள் இன்று கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Finance minister Nirmala Sitharaman 's Indian Budget 2023-24: What are the 5 big expectations?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X