இந்துக்கள் மக்கள்தொகை குறைந்து முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? மறுக்கும் மக்கள்தொகை அமைப்பு!
டெல்லி: இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை 43.15% அதிகரித்துள்ளதாகவும், இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துள்ளதாகவும் பொருளாதார ஆலோசனைக் குழு பிரதமருக்கு வழங்கிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், பாப்புலேஷன் ஃபவுன்டேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு அதனை மறுத்துள்ளது.
அண்மையில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை ஊடுருவியர்கள் என்றும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பெற்றவர்கள் என்றும் விமர்சித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாகவும், இந்துக்களின் மக்கள்தொகை 7.82% குறைந்துள்ளதாகவும் பொருளாதார ஆலோசனைக் குழு பிரதமருக்கு வழங்கிய ஆய்வறிக்கை மே 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தியா உட்பட 167 நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினரின் பங்கு குறித்து இந்திய பொருளாதார ஆலோசனைக் குழு பிரதமருக்கு வழங்கிய ஆய்வறிக்கையில் உள்ள தரவுகள் தவறாகச் சித்தரிக்கும் வகையில் உள்ளதாக இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை (PFI) ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
மக்கள்தொகைப் போக்குகள் மற்றும் இனப்பெருக்க/ பாலியல் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்யும் ஒரு சுயாதீனமான சிந்தனைக் குழுவான PFI, முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சியைப் பற்றி எச்சரிக்கையைப் பரப்புவதற்காக வெளியிடப்பட்ட இந்திய பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகளை ஊடகங்கள் தவறாக வெளிபடுத்துவதாகவும், ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்கள் தவறானது என்றும் தெரிவித்துள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவால் மே 7 அன்று வெளியிடப்பட்ட "மத சிறுபான்மையினரின் பங்கு: நாடு தழுவிய ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வு (1950-2015)" என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, இந்தியா உட்பட 167 நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மத சமூகங்களின் பங்குகளை ஆய்வு செய்துள்ளது.
இந்தியாவில் 1950 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 7.82% குறைந்துள்ளது. அதேசமயம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 43.15% அதிகரித்துள்ளது. இந்திய மக்கள்தொகையில், 1950-ல் 84.68 ஆக இருந்து இந்துக்களின் சதவீதம், 2015-ல் 78.06 ஆக குறைந்துள்ளது. 1950-ல் 9.84 ஆக இருந்த இஸ்லாமியர்களின் சதவீதம், 2015-ல் 14.09 ஆக உயர்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1950-ல் 2.24 ஆக இருந்த கிறிஸ்தவர்களின் சதவீதம், 2015-ல் 2.36 ஆக உயர்ந்துள்ளது. இது 5.38% உயர்வு. 1950-ல் 1.24% இருந்த சீக்கியர்கள், 2015-ல் 1.85% ஆக உயர்ந்திருக்கிறார்கள். இது 6.58% உயர்வாகும். அதேநேரத்தில் சமணர்கள் மற்றும் பார்சிக்களின் சதவீதம் குறைந்துள்ளது. 1950-ல் 0.45% ஆக இருந்த சமணர்களின் எண்ணிக்கை, 2015-ல் 0.36% ஆக குறைந்துள்ளது. 1950-ல் 0.03% ஆக இருந்த பார்சிக்கள், 2015-ல் 0.004% ஆக இருக்கிறார்கள். இது 85% சரிவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், பெரும்பான்மை மக்களின் விகிதம் குறைந்து வரும் போக்கு நிலவுவதாகவும், அதை ஒட்டி இந்தியாவிலும் பெரும்பான்மை மக்களின் விகிதம் 7.82% குறைந்துள்ளது. இது சமூகத்தில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் உள்ளதைக் காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை மக்கள்தொகை குறைவதும், சிறுபான்மை மக்கள் தொகை உயர்வதும் உலகலாவிய போக்கு என்றாலும், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை. இந்த நாடுகளில், பெரும்பான்மை மதப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து, சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் சுருங்கியுள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத இந்தியா, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தியதன் காரணமாக 2011 இல் நடத்தப்பட்டதுதான் இந்தியாவின் கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பு. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 96.63 கோடி இந்துக்கள், அதாவது இந்திய மக்கள்தொகையில் 79.8%. 17.22 கோடி முஸ்லிம்கள் அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் 14.2% முஸ்லீம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கட்டுரை பற்றி விமர்சித்துள்ள இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை PFI, பெரும்பான்மைவாதத்தை நோக்கிய இந்தியாவின் சாய்வு மற்றும் முஸ்லீம் மற்றும் சீக்கிய சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பற்றிய விமர்சனங்களை எதிர்கொள்ளும் முயற்சியில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
மேலும், PFI தமது அறிக்கையில், "வங்கதேசம் மற்றும் இந்தோனேஷியா போன்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் இந்தியாவுடன் ஒப்பிடும்போது குறைவான பிறப்பு விகிதத்தை விளைவித்துள்ளன. இந்த நாடுகள் பெண் கல்வி, அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் கருத்தடை தேர்வுகளுக்கான சிறந்த அணுகல் மூலம் இதை சாத்தியப்படுத்தி உள்ளன. கருவுறுதல் குறைவு என்பது மதரீதியான தொடர்பைக் காட்டிலும் வளர்ச்சிக் காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது." எனச் சுட்டிக்காட்டி உள்ளது.
முஸ்லீம்களின் தசாப்த வளர்ச்சி விகிதம் மூன்று தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்து வருவதை அடுத்தடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புகள் காட்டுகின்றன, இந்த சரிவு இந்துக்களை விட முஸ்லீம்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வுகள் இந்தியாவில் அனைத்து மத குழுக்களுக்கான TFR குறைந்து வருவதாகவும், முஸ்லிம்களிடையே மிகப்பெரிய சரிவு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
"முஸ்லீம் மக்கள்தொகை அதிகரிப்பை முன்னிலைப்படுத்த ஊடகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட டேட்டா பரப்பும் முயற்சி, பரந்த மக்கள்தொகை போக்குகளை புறக்கணிக்கும் தவறான சித்தரிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அதன் நிர்வாக இயக்குனர் பூனம் முத்தரேஜாவை மேற்கோள் காட்டி PFI அறிக்கை கூறியுள்ளது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications