எதிர்க்கட்சிகள் ஓகே...முன்கூட்டியே முடிகிறதா பட்ஜெட் கூட்டம்
டெல்லி : பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15 க்கு பதிலாக, 2 நாட்கள் முன்தாக பிப்ரவரி 13 ம் தேதியே முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 29 ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15 வரை நடைபெற உள்ளதாகவும், 2 வது பகுதி மார்ச் 8 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8 வரை நடைபெறும் என்றும் முதலில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் ராஜ்யசபா அமர்வு பிப்ரவரி 13 உடன் நிறைவடைய உள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியும் பிப்ரவரி 15 க்கு பதிலாக பிப்ரவரி 13 ம் தேதியே முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் இது பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பட்ஜெட் தொடரை சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ராஜ்யசபா தலைவர் வெங்ககைய்யா நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்க அனைத்து கட்சி தலைவர்களும், அனைத்து விவாதங்களின் போதும் முழு ஒத்துழைத்து தருவதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் என 25 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது பட்ஜெட் குறித்து விவாதிக்க அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பரிசீலிப்பதாக வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
விவாதத்தின் போது அனைத்து உறுப்பினர்களும் பேசுவதற்கு வாய்ப்பளிப்பதற்காக, மசோதாக்களை தாக்கல் செய்யும் போது அது பற்றி சுருக்கமாக அமைச்சர்கள் பேசும்படியும் வெங்ககைய்யா கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications