21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை தேர்தல்! 2019 முடிவை எதிர்க்கட்சிகள் முறியடிக்குமா?
டெல்லி: நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நேற்று பிரசாரம் முடிந்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில், சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர் மற்றும் பிலிபித் ஆகிய தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் கூச்பெஹார், அலிபுர்துவார்ஸ் மற்றும் ஜல்பைகுரி ஆகிய இடங்களிலும் ஆகிய தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் ராம்டெக், நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர் மற்றும் சந்திராபூர் தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
ராமர் கோயில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றுடன் மோடி பிம்பத்தை வைத்து பாஜக இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. மாறாக எதிர்க்கட்சியின் இந்தியா கூட்டணியினர், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, மத மோதல்கள், சீனா எல்லை விவகாரம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றை வைத்து பாஜகவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. அதேபோல, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் நாளை அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. சுமார் 6.23 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கிறார்கள். அதேபோல புதுச்சேரியை போறுத்த அளவில், 10.24 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு மட்டும் இன்று முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு பாஜக vs இந்தியா கூட்டணி vs பகுஜன் சமாஜ் என மும்முனை போட்டி நிலவுகிறது. அதேபோல பீகாரிலும் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 4 (அவுரங்காபாத், கயா, ஜமுய், நவாடா) தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 4 தொகுதிகளிலும் சேர்த்து 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 4 தொகுதிகளும் பாஜக கைப்பற்றியிருந்தது. எனவே இந்த முறை எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications