காவிரி மேட்டர்.. ஸ்டாலினுக்கு கைமேல் வெற்றி! உடனே ஓகே சொன்ன உச்சநீதிமன்றம்! எதிர்கட்சிகளுக்கு ஷாக்
டெல்லி: காவிரி விவகாரத்தில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மேற்கொண்டு உள்ள நடவடிக்கை ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அது என்ன வெற்றி? விரிவாக பார்ப்போம்.
காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 38 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடக அரசு அதிகாரிகளோ காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை மதிக்காமல் தண்ணீரை திறக்க மறுத்தனர்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரில் 41 டி.எம்.சி பாக்கி வைத்திருக்கிறது. இந்த மாதத்தில் எஞ்சியுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டி.எம்.சி வீதம் 24 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற சூழல் இருந்தது.
ஆகஸ்ட் இறுதி வரை கர்நாடகா 65 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு 10 டி.எம்.சி தண்ணீரை வழங்குவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்து இருந்தார்.
இதன் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பாக இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் வாதிடுகையில், "காவிரி மேலாண்மை வாரிய அறிவுறுத்தலின்படி ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பதற்காகவே இந்த அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரிக்க தனி அமர்வு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "நிச்சயமாக.. இன்றே காவிரி விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க அதற்கென புதிதாக தனி அமர்வு அமைப்போம்." என்றார். இந்த தனி அமர்வு காரணமாக காவிரி விவகாரம் தொடர்பான வழக்குகளில் விரைந்து தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசு மீது அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைக்கும் பெரிய குற்றச்சாட்டு காவிரி விவகாரம்தான். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வேறு அமைந்துவிட்டதால் அதன் கூட்டணியில் உள்ள திமுக அரசை கடுமையாகஅவர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மேற்கொண்டு உள்ள நடவடிக்கை என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. தனி அமர்வு அமைக்கப்படுவதன் காரணமாக முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவு, காவிரி மேலாண்மை வாரிய அறிவுறுத்தல்கள் கர்நாடக அரசு மீறும்போது அதற்கு எதிரான உடனடியாக உத்தரவை பெற முடியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications