வேஸ்ட்! 10 ஆண்டுகளில் மோசமான சாதனை.. மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு
டெல்லி: பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை என்றால் அந்த பட்ஜெட்டே பயனற்றதுதான். பத்தாண்டுகளாக மக்கள் விரோத பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது என்று அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதன்படி, மத்திய பாஜக அரசு இன்று தனது 10-வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யபடும் பட்ஜெட் என்பதால் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.

தேர்தலுக்கு பின் அமையும் புதிய அரசு, அடுத்து முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இடைக்கால பட்ஜெட் என்றாலும் கூட.. தேர்தலுக்கு முன்பான பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு பட்ஜட் மீது உள்ளது. வரிச்சலுகைகள், விலைகுறைப்புகள் பற்றி எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிறியிருந்தது. இந்த நிலையில்தான் சரியாக காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று காலம் இருந்தால் கூட பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என்ற இலக்கை அரசு நெருங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கிராமப்புறங்களில் கட்டித்தரப்படும். மேலும் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் 70 சதவீதம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.
வீடுகளில் சோலார் பேனல்கள் வைப்பவர்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வருமான வரியில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் என்றார். இதேபோல் பெட்ரோல், டீசல் விலை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை என்றால் அந்த பட்ஜெட்டே பயனற்றது தான். பத்தாண்டுகளாக மக்கள் விரோத பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது என்று சமாஜ்வாடி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
அகிலேஷ் யாதவ் கருத்து: இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை என்றால் அந்த பட்ஜெட்டே பயனற்றதுதான். பத்தாண்டுகளாக மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்து பாஜக அரசு அவமானகரமான ஒரு சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. ஏனெனில் நேர்மறையான ஒரு அரசாங்கம் வரப்போவதற்கான நேரம் இதுவாகும். என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கருத்து: இதேபோல் காங்கிரசும் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்று விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- சுய பாராட்டு, சுயதம்பட்டத்தை தவிர இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை" என்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவ் மனிஷ் திவாரி பட்ஜெட் உரை பற்றி கூறியதாவது:- நிதிப்பற்றாக்குறை உயர்ந்து இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏனென்றால் நிதி அமைச்சர் முன்வைத்துள்ள புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது 18 லட்சம் கோடிக்கு மேல் மத்திய பட்ஜெட்டில் நிதியில்லாத நிலை உள்ளது தெரிகிறது. இந்த எண் இன்னும் அதிகரிக்கவே போகிறது" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications