"ஓபிசி கும்பமேளா'.. பாஜகவின் 5 மாநில தேர்தல் 'கண்டுபிடிப்பு' - உ.பி.யில் நவம்பரில் நடத்த திட்டம்!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தலை முன்வைத்து நாடு முழுவதும் இருந்து 'இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்கள்' (OBC) ஒன்று கூடும் "மகா கும்பமேளா"வை நடத்த மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு முதல் பிரசாரம் வரை அத்தனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

கருத்து கணிப்பு முடிவுகள்: இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக ராஜஸ்தானில் மட்டும் வெல்லக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது இதுவரையிலான தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர், ம.பி.யில் கடும் போட்டி நிலவக் கூடும் என்பதும் கருத்து கணிப்பு முடிவுகள்.
ஓபிசி வாக்குகள்: தற்போது தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் 5 மாநிலங்களிலும் இதர பிற்படுத்தப்பட் ஜாதியினரே (ஓபிசி) பெரும்பான்மையினரான வாக்கு வங்கி. ஆகையால் இந்த ஓபிசி ஜாதியினரை இலக்கு வைத்து பாஜக அடுத்தடுத்த வியூகங்களை மேற்கொண்டு வருகிறது.
விஸ்வகர்மா திட்டமும் ஓபிசி ஓட்டுகளும்: இதன் முதல் கட்டமாக செப்டம்பர் 17-ந் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை நாடு முழுவதுமான இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான திட்டமாக கொண்டு செல்வது என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 140 இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்காக ரூ13,000 கோடி நிதி உதவி வழங்கக் கூடிய இத்திட்டம் என்பதை மையமாக வைத்து மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்வது என்பதுதான் பாஜகவின் வியூகம். அன்றைய தினம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆற்றுகிற உரையை மக்களிடையே ஒளிபரப்பு செய்வதற்கு விரிவான ஏற்பாடுகளை பாஜக செய்து கொண்டிருக்கிறது.
ஓபிசி மகா கும்பமேளா: இதன் அடுத்ததாக நாட்டின் அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்களை ஒருங்கிணைத்து "ஓபிசி மகா கும்பமேளா' ஒன்றை நவம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலாம் பிரக்யாராஜில் நடத்த உள்ளது பாஜக. அந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் பிராமணர்களின் கட்சியாக அறியப்பட்டாலும் தற்போதைய தலைவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட பெரும்பாலானோர் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள்; ஆகையால் பாஜக ஒரு ஓபிசி கட்சி என்கிற முத்திரையை பதித்து வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கத்தில் கல்லெறிந்து பார்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் வாக்குகள் 40%. ஆகையால் ஓபிசி மகா கும்பமேளா என்பது 5 மாநில தேர்தல்களுக்கும் பயன்படும்; அடுத்த சில மாதங்களில் வரப் போகிற லோக்சபா தேர்தலுக்கும் உதவும் என்பதுதான் பாஜகவின் வியூகமாம். இந்த மகா கும்பமேளாவுக்காக நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களின் ஜாதி கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான குட்டி குட்டி ஜாதி கட்சிகளின் தலைவர்கள் மகா கும்பமேளாவுக்கு அழைத்துச் செல்லப்படவும் இருக்கின்றனராம்.
கச்சேரி களைகட்டுதே!
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications