Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா பரபர ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக பாஜகவின் அகில இந்திய அளவிலான நிர்வாகிகள், மாநில தேர்தல் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார். குறிப்பாக லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைகள், விவசாயிகள் போராட்டம் என்ன மாதிரியான தாக்கத்தை தேர்தல்களில் ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இதர மாநிலங்களில் பாஜகதான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.

பொதுவாக உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். உ.பி., உத்தரகாண்ட்டில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை இருக்கிறது என்கின்றன கருத்து கணிப்புகள்.

5 மாநில நிலவரம்

5 மாநில நிலவரம்

இருந்த போதும் பஞ்சாப் தவிர்த்த இதர 4 மாநிலங்களிலும் எப்படியும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்கின்றன அந்த கருத்து கணிப்புகள். அதனால் பாஜக இந்த 4 மாநிலங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு சரியான கூட்டணியும் இல்லை கட்சி பலமும் இல்லை. அதனால் பஞ்சாப் மாநிலம் பற்றி பாஜக கவலைப்படவும் இல்லை. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவி வருவதால் அங்கு தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு உள்ளன என்கின்றன கருத்து கணிப்புகள்.

ஜேபி நட்டா ஆலோசனை

ஜேபி நட்டா ஆலோசனை

இந்த நிலையில் டெல்லியில் இன்று 5 மாநில தேர்தல்களை எதிர்கொள்வது எப்படி? என்ன மாதிரியான வியூகத்துடன் களம் இறங்குவது என்பது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது: தற்போதைய அரசியல் வரையறைகளையே மாற்றும் அளவுக்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் மத்திய அரசு ஏழைகளுக்கு ஏராளமான உதவிகளை செய்தது. பாஜகவினர் தேசத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும். தேர்தல் களத்தில் அரசியல் லாபங்களுக்காக மட்டுமல்லாது சமூக நலன்களுக்காகவும் உழைக்க வேண்டும் என்றார்.

ஏராளமான திட்டங்கள்

ஏராளமான திட்டங்கள்

இன்றைய கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், அருண்சிங், துஷ்யந்த் கெளதம், தேசிய செயலாளர்கள் வினோத் தாவ்டே, ஹரீஷ் திவேதி, உ.பி. மாநில பொறுப்பாளர் ராதாமோகன் சிங், கோவா மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாநில தேர்தல் கள நிலவரம், எந்த வியூகத்துடன் இறங்கினால் வெல்ல முடியும் ஆகியவை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்படும் தாக்கங்கள், அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைகள்

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைகள்

உ.பி.யின் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் ஜீப் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் அதனை சமாளிக்கும் விதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் 5 மாநிலங்களிலும் பாஜகவின் தேர்தல் பணிகள் கூடுதல் விறுவிறுப்படையும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+