17-வது லோக்சபா: சிதைந்த ஜம்மு காஷ்மீர்! 370-வது பிரிவு ரத்து; யூனியன் பிரதேசங்களாக்கப்பட்ட துயரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 17-வது லோக்சபா கூட்டத் தொடரில் 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனம் பன்னெடுங்காலம் வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து தரக் கூடிய 370-வது ரத்து செய்யப்படும் மசோதாவை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலமே 2 யூனியன் பிரதேசங்களாகவும் துண்டாடப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.

17-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு & காஷ்மீர் தொடர்பாக இரண்டு மசோதாக்கள் மற்றும் இரண்டு தீர்மானங்களை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி தாக்கல் செய்தார். இம்மசோதாவானது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தது; மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக கூறு போட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமானது சட்டசபையை கொண்டதாகவும் லடாக் என்பது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றது இந்த மசோதா. ஜம்மு காஷ்மீருக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் மாநில அந்தஸ்து வழங்குவோம் என அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியும் அளித்திருந்தார்.

Flash Back: 17th Lok Sabha passed Bill Abrogation of Article 370 from Jammu Kashmir

அப்போது பிரதமர் மோடி கூறியிருந்ததாவது: ஜம்மு , காஷ்மீர் , லடாக் ஆகியவற்றின் தீரம் மிக்க , உறுதி வாய்ந்த எனது சகோதர , சகோதரிகளை நான் வணங்குகிறேன். உணர்ச்சியைத் தூண்டும் குறுக்குவழியில் நம்பிக்கை கொண்ட தன்னலவாதிகள் மக்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி கவலைப்படாமல் பல ஆண்டுகளாக இருந்தனர். அவர்கள் பூட்டிய விலங்குகளிலிருந்து ஜம்மு, காஷ்மீர் இன்று விடுதலை அடைந்துள்ளனர். புதிய விடியல் பிறந்துள்ளது. சிறந்த எதிர்காலத்திற்காக காத்திருக்கிறது.

ஜம்மு, காஷ்மீர் லடாக் தொடர்பான மசோதாக்கள் ஒருமைப்பாட்டையும், அதிகாரம் அளித்தலையும் உறுதி செய்யும். இந்த நடவடிக்கைகள் இளைஞர்களைப் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டுவரும். தங்களின் திறன்களையும், திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும். உள்ளூர் கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படும்.

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற மாபெரும் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இந்த முடிவு அப்பகுதியின் ஒட்டு மொத்த வளமைக்கு உத்வேகம் அளிக்கும் சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை உறுதி செய்யும்.

ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை தொடர்பான முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாடுபட்ட மாமனிதர் சர்தார் பட்டேல், டாக்டர் பாபா சாஹேப், அம்பேத்கர், அவரது கருத்துக்கள் அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் எஸ்.பி.முகர்ஜி ஆகியோருக்கு செலுத்தும் தகுதி வாய்ந்த மரியாதையாகும்.

நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து ஆரோக்கியமான விவாதத்தில் பங்கேற்றது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பெருமிதத்தை உயர்த்திய தருணமாகும். இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் பாராட்டுகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் வேறுபாடுகளைக் கடந்து, இந்தப் பகுதிகளின் எதிர்காலம் பற்றியும் அங்கு அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றை உறுதி செய்வது பற்றியும் விவாதித்தது குறித்து ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்கள் பெருமிதம் கொள்ளலாம். மாநிலங்களவையில் 125:61, மக்களவையில் 370:70 என்ற இறுதியான எண்ணிக்கை முழுமையான ஆதரவைத் தெளிவாகக் காண முடியும்.

ஜம்மு, காஷ்மீர். லடாக் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்காக உள் அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்கிறார். இந்த மசோதாக்கள் நிறைவேறியதில் அவரது உறுதிப்பாட்டையும், ஊக்கத்தையும் தெளிவாகக் காண முடியும். அமித் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்களைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றம் அண்மையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உறுதி செய்து தீர்ப்பளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+