Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசை குலைநடுங்க வைத்து மோடியை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்த 2021 டெல்லி விவசாயிகள் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று மீண்டும் விவசாயிகள் 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 2020-21ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தைப் போல இப்போராட்டம் உக்கிரமடைந்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க டெல்லி போலீசார் முழுவீச்சில் தயாராக உள்ளனர்.

2020-ம் ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் எதிர்காலத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கக் கூடியது என்பதால் பெரும் கிளர்ச்சி வெடித்தது. 2020-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி சுமார் ஓராண்டு காலம் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர் விவசாயிகள். கடும் பனி, உறைபனி, வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் நடந்த இப்போராட்டத்தில் 800க்கும் அதிகமானோர் உயிரைத் தியாகம் செய்தனர்.

Flash Back: PM Modi Apologise to Farmers during 2021 Protest

தலைநகர் டெல்லியில் முகாமிட்டு போராடிய விவசாயிகளின் இந்த நெஞ்சுரமிக்க போராட்டம் மத்திய அரசின் இறுக்கத்தனத்தை குலைநடுங்க வைத்தது. மத்திய அரசு நடத்திய 7 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைய விவசாயிகள் தங்களது கோரிக்கைகளில் இருந்து இறங்கிவரவே இல்லை. இறுதியாக மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் தன் பிடிவாதத்தை கைவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன.

இதன் உச்சமாக 2021-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களுக்காக விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டார் என்பது மிக முக்கியமான வரலாறு.

2021-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. எனது ஐம்பதாண்டு கால பொது வாழ்க்கையில் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை மிகவும் நெருக்கமாக இருந்து நான் பார்த்திருக்கிறேன். எனவே, இந்த நாட்டிற்குப் பிரதமராக சேவை செய்ய 2014ல் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உயர்ந்தபட்ச முன்னுரிமையை நாங்கள் வழங்கினோம்.

மூன்று வேளான் சட்டங்களையும் திரும்பப்பெற நாங்கள் முடிவுசெய்திருக்கிறோம் என்பதை உங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன். இம்மாத பிற்பகுதியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை நாங்கள் நிறைவு செய்வோம்.

விவசாயிகளில் ஒரு பகுதியினர் மட்டும் போராட்டம் நடத்தினாலும், அது எங்களுக்கு முக்கியமானது. விவசாயப் பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள், முற்போக்கு விவசாயிகள் ஆகியோரும் விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரிய வைக்க கடுமையாக முயன்றனர். நாங்கள் மிகவும் பணிவுடன், திறந்த மனதுடன் அவர்களுக்கு விளக்கிக்கொண்டே இருந்தோம். தனிப்பட்ட மற்றும் குழு தொடர்புகள் பல்வேறு வழிகளில் தொடர்ந்தன. விவசாயிகளின் வாதங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். அவர்களுக்கு ஆட்சேபனைகள் இருந்த சட்ட விதிகளை மாற்றவும் அரசு ஒப்புக்கொண்டது. இந்த சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தவும் நாங்கள் முன்மொழிந்தோம். இதற்கிடையில், இந்த விவகாரம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது. இந்த விஷயங்கள் அனைத்தும் நாட்டின் முன்னால் உள்ளன, எனவே நான் மேலும் விரிவாக செல்ல மாட்டேன். நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்கும் அதே வேளையில், விவசாய சகோதரர்களுக்கு விளக்கின் வெளிச்சம் போல உண்மையை விளக்க முடியாமல் போனதற்கு எங்களது தவத்தில் ஏதோ குறை இருந்திருக்கலாம் என்பதை இன்று மனதார சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் இறுக்கமான பிடிவாதத்தை தளர்த்தச் செய்தது மட்டுமல்லாமல் பிரதமர் மோடியையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் 2021 விவசாயிகளின் போராட்டம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+