Flash Back 2023: பிரதமர் மோடியின் 11 வெளிநாட்டு பயணங்கள், உயரிய விருதுகள், சர்வதேச மாநாடுகள்!
டெல்லி: 2023-ம் ஆண்டு பிரதமர் மோடி 11 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றார். பிரதமர் மோடியின் 2023-ம் ஆண்டு வெளிநாட்டு பயணங்கள் குறித்த பார்வை.
மே 19- 21: ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அந்நாட்டின் தலைமையில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பு.

மே 21-22 : பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் சென்றது முதல் முறை. பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாராபேவுடன் இணைந்து இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கு தலைமை வகித்தார்.
மே 22-24 : ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீசின் அழைப்பை ஏற்று அந்நாட்டின் சிட்னி நகருக்கு பயணம்.
ஜூன் 20-23: அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக அமெரிக்கா பயணம். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஐ.நா தலைவர்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தினருடன் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்பு.
ஜூன் 24-25: எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு அரசு முறை பயணம்.
ஜூலை 15-13: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பாஸ்டல் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்பு. பிரான்சின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல் விருது வழங்கப்பட்டது.
ஜூலை 15: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறை பயணம். அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு நிகழ்வாக வரவேற்றார்.
ஆகஸ்ட் 22-24: தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் உள்ள சம்மர் பிளேஸில் நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பு.
ஆகஸ்ட் 25: கிரீஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம். அந்நாட்டின் 2-வது உயரிய சிவிலியன் விருது, 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை அந்நாட்டு அதிபர் கத்தரீனா சாகெல்லரோபௌலோ வழங்கினார்.
செப். 5 முதல் 7: ஆசியான் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம்.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 2: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும் அபுதாபி ஆட்சியாளருமான எச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் உலக பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துபாய் பயணம்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications