என்னது இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்ட மறுப்பு
டெல்லி: இந்தியாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் திட்டவட்டமாக இன்று மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி 2 வாரங்களாகிவிட்டது. கடந்த சில நாட்களாகத்தான் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற லோக்சபாவில் லைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. திமுகவின் கனிமொழி எம்.பி, காங்கிரஸின் ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் தமிழில் பேசினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் லோக்சபாவில் நேற்று தமிழில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
பெரும்பாலான நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான இடத்தில் இருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று இந்தியப் பொருளாதாரம் தேக்கமடைய, நெருக்கடி ஏற்பட வாய்ப்பே இல்லை. கொரோனா இரண்டாவது அலை, ஒமைக்ரான், உக்ரைன் போர் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் 7%-க்கும் குறைவாகவே பணவீக்கம் உள்ளது; நாட்டில் வங்கிகள் மீதான நெருக்கடி குறைவாகவே உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்யசபாவிலும் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான லூசின்ஹோ, நாட்டின் ரூபாய் மதிப்பு 28 முறை சுமார் 34% சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது என குற்றம்சாட்டினார். இதேபோல் எம்.பி.க்கள் பலரும் பொருளாதார நிலவரம் தொடர்பாக கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்ததாவது: நமது நாட்டின் ரூபாய் மதிப்பு தற்போது வீழ்ச்சி அடையவில்லை. நமது ரூபாய் மதிப்பு நிலையானதாகவே இருக்கிறது. நாட்டின் ரூபாய் மதிப்பு நிலவரத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரூபாய் மதிப்பில் ஏற்றம், இறக்கம் என்கிற தடுமாற்றம் இருந்தால்தான் ரிசர்வ் வங்கி தலையிடும். இருந்த போதும் ரூபாய் மதிப்பு இயல்பாகவே சரி செய்து கொள்ளக்கூடியதுதான். நமது ரூபாய் மதிப்பு கவலைப்படக் கூடியதாகவும் இல்லை. அன்னிய செலாவணி கையிருப்பும் ஆரோக்கியமான நிலையில்தான் உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications