6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளனர்.. நிர்மலா சீதாராமன் தகவல்
டெல்லி: பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6.81 கோடி இலவச எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கொரோனா நெருக்கடியால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ரூ. 20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு தொகுப்பை வெளியிட்டார். இதற்கான திட்டங்கள் குறித்து கடந்த 4 நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்றைய தினம் இறுதி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சுகாதாரம் மற்றும் கல்வி, தொழில் மற்றும் கொரோனா, எளிதாக தொழில் செய்வது, பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு வளங்கள் உள்ளிட்ட 7 துறைகளுக்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில் 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குகள் உள்ள 20 கோடி பெண்களுக்கு ரூ 10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 2.2 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ 3, 950 கோடி வழங்கப்பட்டுள்ளது.
6.81 கோடி பெண்கள் இலவச கேஸ் சிலிண்டர்களை பெற்றுள்ளனர். 12 லட்சம் பி.எப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர் என்றார் நிர்மலா சீதாராமன்.
Recommended Video
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications