இந்திய ரூபாய்க்கு விழுந்த மரண அடி.. தங்கம் விலை எகிற போகுது.. யாராலும் காப்பாற்றவே முடியாது!
டெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குச் சரிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று முதல்முறையாக 91ஐ தொட்டது. ரூபாய் மதிப்பு இந்தளவுக்குச் சரிவது இதுவே முதல்முறையாகும். ரூபாய் மதிப்பு இந்தளவுக்கு சரிந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பு நிலையாக வைக்க முயன்றாலும் கூட அதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 0.8% வரை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்திருந்தது. இந்த மாதமும் கூட ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிகிறது.

கடும் சரிவு
இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதன்முறையாக 91ஐ தாண்டியது. இன்றைய நாள் வர்த்தகத்தின்போது ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 36 பைசா வரை சரிந்தது. குறிப்பாகக் காலை 11.45 மணியளவில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 91.14ஆக வர்த்தகமானது. அதன் பிறகு சற்று ரூபாய் மதிப்பு உயர்ந்தது. மாலை 7 மணியளவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.93 என்ற அளவில் இருக்கிறது.
காரணங்கள் என்ன
இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறுவது, இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருப்பது இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. கடந்த 10 நாட்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90ல் இருந்து 91 ஆகக் குறைத்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ரூபாய் மதிப்பு 1% வரை குறைந்துள்ளது.
இது தொடர்பாக ஃபின்ரெக்ஸ் டிரஷரின் அனில் குமார் கூறுகையில், "இந்தியா அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதியாவது போலத் தெரியவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனச் சொல்கிறார்கள். ஆனாலும், இதில் குழப்பம் இருப்பதே ரூபாய் மதிப்பு சரியப் பிரதானக் காரணமாக இருக்கிறது" என்றார்.
சர்வதேச முதலீட்டாளர்கள்
திங்கட்கிழமை அன்று வெளியான ரிப்போர்ட்டில் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதையும் பன்சாலி சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதே இதற்குப் பிரதானக் காரணம் என்றும் பன்சாலி கூறினார். நேற்று ஒரே நாளில் ₹1,468.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். இதுவே ரூபாயின் சரிவுக்கு இன்னொரு முக்கிய காரணமாக இருக்கிறது.
தங்கம் விலை
ரூபாய் மதிப்பு சரிவது பல்வேறு வழிகளிலும் இந்தியாவைப் பாதிக்கும். இதுபோல ரூபாய் மதிப்பு சரியும்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை உயரும். அதாவது டாலர் மதிப்பில் அதன் விலை உயரவில்லை என்றாலும் ரூபாய் மதிப்பு சரிவதால் நாம் அதிக ரூபாய் கொடுத்தே இறக்குமதி செய்ய வேண்டும். இதனால் ரூபாய் மதிப்பு அதிகளவில் சரிவது இந்தியாவுக்குப் பாதிப்பையே தரும். கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பொருட்களை நாம் பெரும்பாலும் இறக்குமதியே செய்கிறோம். ரூபாய் மதிப்பு இப்படித் தொடர்ந்து சரிவதால் இதன் விலையும் உயரலாம்!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications