முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்.. ஐஎப்எஸ் அதிகாரி டூ அரசியல்.. யார் இவர்?
டெல்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நட்வர் சிங், டெல்லி அருகே குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நட்வர் சிங், டெல்லி அருகே குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் கடந்த 1931ஆம் ஆண்டு பிறந்த நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 - 2005 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும் இவர் 1966-71 அம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
வெளியுறவுத்துறையில் 31 ஆண்டு காலம் நட்வர் சிங் பணியாற்றினார். 1984 ஆம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நட்வர் சிங் அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் இருந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்ட நட்வர் சிங் 1985 ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள நட்வர் சிங்கிற்கு கடந்த 1984 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது விழங்கப்பட்டது. நட்வர் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- "வெளியுறவுக் கொள்கையில் நட்வர் சிங் மிகப்பெரிய பங்களிப்பினை செய்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. நட்வர் சிங் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications