கோவிஷீல்டு தடுப்பூசி.. 10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே பாதிப்பு! ICMR முன்னாள் விஞ்ஞானி விளக்கம்
டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி செத்திக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படியான பிரச்னை 10 லட்சத்தில் 7 பேருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று தடுப்பூசி குறித்த விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன.

குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசி அரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து இந்த தடுப்பூயை உருவாக்கியது. இதனை சீரம் இஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா தயாரித்தது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை மத்திய அரசு இரண்டு தவணைகளாக இலவசமாக வழங்கியது. சுமார் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த தடுப்பூசி தயாரித்த ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் சில விவரங்களை தாக்கல் செய்தது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசி அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறது. இது இந்தியாவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஆனால், இது குறித்து பயப்பட வேண்டாம் என்று தொற்று நோயியல் நிபுணரும், ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் ராமன் கங்ககேத்கர் கூறியுள்ளார்.
"முதல் டோஸ் செலுத்திக்கொள்ளும்போது பக்கவிளைவுகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதே இரண்டு மற்றும் மூன்றாவதாக செலுத்தப்படும் பூஸ்டர் டோஸ்களுக்கு பிறகு முற்றிலுமாக குறைந்துவிடும். மட்டுமல்லாது, பக்கவிளைவுகள் ஏற்படுவதாக இருந்தால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு முதல் மூன்று மாதங்களிலேயே தெரிந்துவிடும். அதிலும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 10 லட்சத்தில் வெறும் 7 பேருக்கு மட்டுமே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
கோவிஷீல்டு தடுப்பூசியில் ஆபத்தை விட நன்மைகள் அதிகமாக இருக்கின்றன. சாதாரணமாக ஏற்படும் விபத்தில் கூட ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படலாம். எனவே இது குறித்து கவலை கொள்ள தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications