"மிக அழகான காட்சி” உபி போலீசாரின் கொடூர தாக்குதலை பாராட்டிய முன்னாள் டிஜிபி -6 மாதத்தில் அந்தர் பல்டி
டெல்லி: ஓய்வுபெற்ற கேரள முன்னாள் டிஜிபி என்.சி.அஸ்தானா, உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்து மிக அழகான காட்சி என பாராட்டி இருக்கிறார்.
Recommended Video
1986 பேட்ச் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான என்.சி.அஸ்தானா, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல் படை உள்ளிட்டவற்றில் உயர் பொறுப்புகளை வகித்தவர்.
கேரள மாநில ஊழல் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராகவும், டிஜிபியாகவும் பதவி வகித்த அவர் 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

போலீஸ் சித்திரவதைகளுக்கு எதிராக பேசிய அதிகாரி
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஆங்கில செய்தி இணையதளத்தில் போலீஸ் சித்திரவதைகளுக்கு எதிராக என்.சி.அஸ்தானா கட்டுரை எழுதி இருந்தார். இந்த நிலையில் ஆறே மாதத்தில் போலீசாரின் கொடூர தாக்குதல்களை பாராட்டியும் வர்ணித்தும் ட்விட்டரில் தொடர் பதிவுகளை அவர் வெளியிட்டு இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உபி போலீசாரின் கொடூர தாக்குதல்
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாக பேசியதை கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கைது செய்து காவல்துறை கொடூரமாக தாக்கியதுடன் அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

மிக அழகான காட்சி
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதில் ஒன்றை ட்விட்டரில் பகிந்துள்ள என்.சி.அஸ்தானா, மிக அழகான காட்சி என வர்ணித்து இருக்கிறார். உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை மனதுக்கு ஆறுதல் தருவதாகவும் அம்மாநில டிஜிபி டி.எஸ்.சவுஹானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ள அவர், சட்டத்தை காலில் போட்டு மிதிப்பவர்களை நொறுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீது விமர்சனம்
மற்றொரு பதிவில், உத்தரப்பிரதேச போலீசார் போராட்டக்காரர் ஒருவரை லத்தியால் தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "காவல்துறையில் பாலிகார்பொனேட் பைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளுக்காக வருந்துகிறேன். பழைய ஆளி விதை எண்ணெயில் ஊறவைக்கப்பட்ட மூங்கில் லத்திகள் சிறப்பாக இருந்தன." என்று தெரிவித்து இருக்கிறார். அடுத்த பதிவில் யோகி ஆதித்யநாத்தை மஹாராஜ் ஜி, என்றும் பத்திரிகையாளர்களை கழுதைகள், முட்டாள்கள் என்று விமர்சித்து உள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி கண்டனம்
என்.சி.அஸ்தானாவின் கருத்துக்கு பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறை, நிர்வாகத்துறை அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஒடிசா கூடுதல் டிஜிபி அருன் போத்ரா தெரிவிக்கையில், "கஸ்டடி வன்முறையை எண்ணி மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. காவல்நிலையத்தில் அடைத்து தாக்குவது வீரமான செயல் அல்ல. சட்டவிரோத நடவடிக்கைகளை புகழாதீர்கள். தண்டிப்பதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. காவல்துறை இல்லை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications