டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங், தமாகா, அதிமுக, 3 முறை தனிக்கட்சிகள்.. இப்ப புதுச்சேரி கண்ணன் பாஜகவில் ஐக்கியம்!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக கட்சிகளில் இருந்தவரும் புதுச்சேரியில் 3 முறை தனிக்கட்சியை தொடங்கி கலைத்தவருமான மாஜி அமைச்சர் பி. கண்ணன் இன்று பாஜகவில் இணைந்தார்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் கண்ணன் இன்று இணைந்தார்.

Former Puducherry Minister P Kannan joins BJP

காங்கிரஸ் கட்சியில் இருந்து கண்ணனின் அரசியல் பயணம் தொடங்கியது. 1996-ல் ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் ஐக்கியமானார். அப்போது புதுச்சேரி திமுக கூட்டணி அரசில் புதுவை உள்துறை அமைச்சராக பதவி வகித்தார் கண்ணன். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது.

இதில் அதிருப்தி அடைந்த கண்ணன் 2001-ல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். ஒரே ஆண்டில் அந்த கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார் கண்ணன்.

2005-ம் ஆண்டு மீண்டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார் கண்ணன். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 2009-ல் மீண்டும் காங்கிரஸில் இந்த கட்சியையும் இணைத்தார் கண்ணன். அப்போது அவர் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார்.

கேரளா பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- நடிகர் சுரேஷ் கோபி திருச்சூரில் போட்டி கேரளா பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- நடிகர் சுரேஷ் கோபி திருச்சூரில் போட்டி

2016-ல் அதிமுகவில் இணைந்தார் கண்ணன். அப்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் கண்ணன். இந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்து புதிய அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளார் பி. கண்ணன்

English summary
Former Puducherry Minister P Kannan today joined BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X