Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்ஸிட் போலை நம்பாதீர்கள்.. உலக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.. அதிர வைக்கும் ஃபார்ச்யூன் 500 கடிதம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Exit Polls 2019 : எக்ஸிட் போல்களை நிராகரிக்கும் மக்கள்!

    டெல்லி: லோக்சபா தேர்தல் குறித்த எக்ஸிட் போலை நம்ப வேண்டாம் என்று உலக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    லோக்சபா தேர்தல் முடிந்ததை அடுத்து நேற்று நிறைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் கருத்து கணிப்புகளை நேற்று வெளியிட்டது.

    இதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

    அதிகம் உயர்ந்தது

    அதிகம் உயர்ந்தது

    இந்த கணிப்புகள் காரணமாக தற்போது பங்கு சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 286 புள்ளிகள் உயர்ந்து 11,694 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    பொதுவாக ஆளும்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்றால் இப்படி பங்கு சந்தைகள் முன்னேற்றம் அடையும். சமயங்களில் புதிய கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூட பங்கு சந்தை உயரும். ஆனால் அது ஆட்சி அமைக்கும் கட்சியை பொறுத்தது. இந்த நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்பதால், அதன் பங்குகள் அதிகம் உயர்ந்தது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் இது தொடர்ந்து நீடிக்காது என்று ஃபார்ச்யூன் 500ல் உள்ள 500 நிறுவனங்களுக்கு பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். ஃபார்ச்யூன் புத்தகம் உலகில் உள்ள 500 பெரிய நிறுவனங்களை எல்லா வருடமும் இந்த பட்டியலில் கொண்டு வரும். இந்த 500 பெரிய நிறுவனங்களுக்குத்தான் தற்போது எச்சரிக்கை கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    அதன்படி இந்திய பங்கு சந்தை தற்போது உயர்வை யாரும் நம்ப வேண்டும். இந்த உயர்வை வைத்து வரும் லாபம் போதும் உடனடியாக பங்குகளை வெளியே எடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதாவது எக்ஸிட் போலை நம்ப வேண்டாம், வேகமாக பங்குகளை வெளியே எடுங்கள் என்று ஃபார்ச்யூன் 500 நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    பொதுவாக ஆட்சி மாற்றம் இருக்க வாய்ப்புள்ள சமயங்களில் மட்டுமே இதுபோல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சி மாறிய போது இதேபோல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே போல ஃபார்ச்யூன் எச்சரிக்கை விடுத்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+