"அடடே மோடி என்ன அழகு.." பிரதமரை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்ட இளம்பெண்! நெகிழ்ச்சி சம்பவம்
டெல்லி: பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆனந்தக் கண்ணீர் விட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மாணுவேல் மாக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

மேலும், வணிகம், பாதுகாப்பு எனப் பல துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் ஜெட்கள், நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி: முன்னதாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாற்றினார். அப்போது அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வியாழன் (ஜூலை 13) அங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் விசா தொடங்கி தனக்கும் பிரான்ஸிற்கும் இடையே இருக்கும் உறவு வரை பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினார். அங்கு வந்திருந்த இந்தியர்கள் பிரதமரின் பேச்சை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவருக்கு அவரையே அறியாமல் ஆனந்தக் கண்ணீர் வந்துள்ளது.
ஆனந்த் கண்ணீர்: பிரதமர் மோடியின் பேச்சை கேட்ட அந்த பெண்ணால் தனது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிரதமர் பேச்சைக் கேட்டு அந்த பெண் ஆனந்தக் கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், "பிரதமர் மோடி தனது இதயத்திலிருந்து பேசினார், அது ஒரு அழகான பேச்சு.. பிரதமர் மோடியின் முகம் ஒளிர்ந்தது. அந்தளவுக்கு அவரது முகம் பிரகாசமானது" என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மேடையில் இருந்த மோடி பேசும் போது அதைக் கேட்டு இவர் கண்ணீர் விட்ட வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பெண் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மோடியைப் பார்த்ததும் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. இது ஒரு அழகான பேச்சு என்று நினைக்கிறேன். அவர் தனது இதயத்திலிருந்து பேசினார். எங்களை மிகவும் கவர்ந்தது மோடியின் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
பிரான்ஸில் யுபிஐ: முன்னதாக அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் அப்போது பேசுகையில், "பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்களால் தான் இந்தியா- பிரான்ஸ் கூட்டாண்மை வலுப்பெறுகிறது. காலநிலை மாற்றம்,, சர்வதேச வினியோக சங்கிலி, எல்லை கடந்த பயங்கரவாதம் ஆகியவற்றில் உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து கற்கப் பல விஷயங்கள் உள்ளன. இந்தியாவும் பிரான்சும் நீண்ட காலமாகத் தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன" என்றார்.
மேலும், பிரான்ஸ் நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் அது ஈபிள் கோபுரத்தில் இருந்து தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications