டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாப்பில் இருக்கோம்! தமிழகம் வாங்க.. இலவசங்கள் என்ன செஞ்சு இருக்கு தெரியும்! பாயின்ட்டை பிடித்த திமுக

Google Oneindia Tamil News

டெல்லி: இலவசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திமுக சார்பில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

Recommended Video

    Freebies Case | தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இலவசங்கள் தேவையா ?

    மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இலவசத் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

    அதேநேரம் மற்றொரு தரப்பினர் மக்களின் வரிப்பணத்தை இலவசங்களாக வீணாக்காக் கூடாது என்றும் அதற்குப் பதிலாக முறையான திட்டங்களைச் செயல்படுத்தினாலேயே மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும் என்றும் தெரிவித்தனர்.

    3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான் 3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான்

    இலவசங்கள்

    இலவசங்கள்

    இப்போது இலவசங்கள் குறித்த விவாதம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியே இலவசங்கள் எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறி வருகிறார். இலவசங்கள் நாட்டின வளர்ச்சியைப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டு வருகிறார். அதேநேரம் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் இலவசங்கள் என்பது பொதுமக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவே கூறி வருகின்றனர்.

    திமுக

    திமுக

    இலவசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. பஞ்சாப் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட இலவசங்களுக்கு எதிரான வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டது திமுக. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞரும் திமுக ராஜ்ய சபா எம்பியுமான வில்சன் உச்ச நீதிமன்றத்தில் விரிவான எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் இலவசங்களை வழங்குவதால் தமிழகம் முன்னேறாமல் இருக்கவில்லை என்பதற்கான பல ஆதாரங்களை அடுக்கி உள்ளார்.

    உள்நோக்கம்

    உள்நோக்கம்

    நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்கு வித்திடும் நலத்திட்டங்களை "இலவசங்கள்" எனக் கருத முடியாது என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இலவசங்களுக்கு எதிராக அஷ்வினி உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. அஷ்வினி உபாத்யாய் குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் பஞ்சாப் தேர்தல் சமயத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    மக்கள் நலத்திட்டம்

    மக்கள் நலத்திட்டம்

    மேலும், அதில், "ஒரு நல மக்கள் நலத்திட்டத்தை இலவசங்கள் என வகைப்படுத்த ஸ்டிரிட்டான அளவுகோலை வைத்துக் கொள்ள முடியாது. அப்படிப் பார்த்தால் அரசு தனது மக்களுக்கு வழங்கும் ஒவ்வொரு சேவையும் இலவசம் என்று அழைக்கப்படும். இந்த நோக்கில் பார்த்தால் கல்வி, மருத்துவம் என அரசு வழங்கும் வசதிகள் கூட இலவசங்களாக மாறிவிடும். இது மனசாட்சிக்கு விரோதமானது.

    மாநில வளர்ச்சி

    மாநில வளர்ச்சி

    இலவசத் திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த திட்டங்கள். தமிழ்நாட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில் மயமாக்கலின் அடிப்படையில் நாட்டின் டாப் 3 மாவட்டங்களில் ஒன்றாக மாற்றுவதில் இதுபோன்ற திட்டங்களே முக்கிய பங்கை ஆற்றினர். இப்போது நாட்டின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளன. இதன் காரணமாகவே பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்வோர் எண்ணிக்கை 8.3%ஆக அதிகரித்து உள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வாங்க

    தமிழ்நாட்டிற்கு வாங்க

    வழக்கைத் தொடர்ந்துள்ள அஸ்வினி உபாத்யா சமூக நலத் திட்டங்கள் எப்படி சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்தி வளர்ச்சிக்குப் பங்காற்றுகிறது என்பதைக் காணத் தமிழ்நாட்டில் சில ஆண்டுகள் வாழ வேண்டும். இந்த மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்றே குறிப்பிடக் கூடாது. பல நூற்றாண்டுகளாகச் சாதி மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினரை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உயர்த்தும் நலத்திட்டங்களே இவை. சமூக, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டும் கருவி தான் இவை

    தமிழக அரசுத் திட்டங்கள்

    தமிழக அரசுத் திட்டங்கள்

    தமிழக அரசு செயல்படுத்தியுள்ள அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் திட்டம் மூலம் குறைந்த வருமானத்தைக் கொண்ட வீடுகளில், 12% வரை பணம் சேமிக்கப்படுவது. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. இலவசத் திட்டங்கள் மூலம் இப்படி பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த மனு கூட்டாட்சி முறைக்கு எதிராக உள்ளது.

    நாட்டையே மாற்றும்

    நாட்டையே மாற்றும்

    இது நாட்டின் கட்டமைப்பை சோசலிச முறையில் இருந்து முதலாளித்துவ நாடாக மாற்றும் முயற்சி. வாக்குறுதிகளை அளிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகவோ அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதிக்கு இணங்க சட்டங்களை உருவாக்கும் அமைப்பிற்கு எதிராகவோ எந்த சட்ட ஆணை பிறப்பிக்க முடியாது என்று அது கூறியது.

    English summary
    DMK about freebies in tamilnadu: (இலவச திட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்டில் திமுக) Freebies are social development schemes says DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X