இந்த பக்கம் ஒரே அனல்.. ராஜ்யசபாவிலோ சிரிப்பலை! கார்கே - ஜெகதீப் தன்கர் இடையே சுவாரசிய உரையாடல்
டெல்லி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் இடையேயான உரையாடல் அவையில் உறுப்பினர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபாவில் அனல் பறக்க விவாதம் இன்று பிற்பகலில் நடைபெற்ற நிலையில், ராஜ்யசபாவில் அவை தொடங்கிய சிறிது நேரத்தில் இந்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது.
நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று அனல் பறந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாஜக குறித்து பேசியதற்கு அக்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபாவில் அனல் பறக்க விவாதம் நடைபெற்ற நிலையில், ராஜ்யசபாவில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் - எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையேயான உரையாடல் அவையில் இணக்கமான சூழலை ஏற்படுத்தியதோடு சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, தனக்கு கால்வலி இருப்பதால் நீண்ட நேரம் நின்று கொண்டு பேச முடியாது என்றார். இதற்கு உடனே பதிலளித்த ராஜ்யசபா சேர்மன், அவையில் நீங்கள் அமர்ந்து கொண்டே பேசலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய கார்கே, அவைத்தலைவர் அனுமதித்தால் மட்டுமே அமர்ந்து பேசுவேன் என்றார். இதற்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர், "அவையில் பேசும் போது உங்கள் சவுகரியத்தை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். நிற்க முடியாத நிலை என்றாலோ வலி என்றாலோ, அமர்ந்து கொண்டு பேசுவது தொடர்பாக நீங்களே முடிவு செய்து எடுத்துக்கொள்ளலாம் என சிரித்து கொண்டே சொன்னார்.
இதற்கு பதிலளித்த கார்கே, "அவையில், நின்று கொண்டு பேசுவதை ஒப்பிடும் போது அமர்ந்து கொண்டே பேசினால் பேச்சு உணர்வுப்பூர்வமாக இருக்காது என்றார். இதை சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஜெகதீப் தன்கர், 'அமர்ந்து கொண்டு பேசினால் சுத்தமாக உணர்வுப்பூர்வமாக பேச்சு இருக்காது. கார்கே ஜி உங்களுக்கு இந்த விஷயத்தில் நான் உதவி செய்கிறேன். உணர்வுப்பூர்வமாக இருப்பதை நான் உயிர்ப்புடன் வைத்து இருக்கிறேன்' என்றார்.
இதற்கு நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, 'சில நேரங்களில் எங்களுக்கு நீங்கள் உதவி செய்து கொண்டே இருக்கிறீர்கள். உங்களையும் நினைவில் வைத்து இருக்கிறோம்" என்றார். என்னை விவாதத்தில் பங்கேற்க அனுமதித்த ராஜ்யசபா தலைவருக்கு நன்றி என கார்கே கூறினார். உடனே, அவையில் இருந்த சில உறுப்பினர்கள் சிரிக்க தொடங்கினர்.
உடனே, "ஏன் உறுப்பினர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள் என்று கார்கே கேள்வி எழுப்பியதோடு, இப்படித்தான் அவர்கள் திரித்து விடுகிறார்கள்" என்றார். கார்கே இவ்வாறு கூறியதும் அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் சிரித்தனர். உடனே கார்கே கூறுகையில், 'ராஜ்யசபா தலைவரும் என்னை தவறாக வழி நடத்துகிறார்"என்றார்.
உடனே ராஜ்யசபா தலைவர் கூறுகையில், "இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம். நானும் அதையே செய்கிறேன்" என்றார். முன்னதாக நேற்று ராஜ்யசபாவில் மையப்பகுதிக்கு சென்று மல்லிகார்ஜுன கார்கே, 'அமளியில் ஈடுபட்டு இருந்தார். இதற்கு ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் இப்படி நடந்து கொள்வதாகவும் இது ஒரு கறை' எனவும் கூறியிருந்தார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications