"6.8% தான்!" குறையும் இந்திய பொருளாதார வளர்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் கணிப்பு! ஏன் முக்கியம்
டெல்லி: இந்தியா பொருளாதார வளர்ச்சி 2022ஆம் ஆண்டில் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்து உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்தச் சூழலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்னவாக இருக்கும் என்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் புதிய கணிப்பை வெளியிட்டு உள்ளது.

பொருளாதாரம்
பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து உள்ளது. உலக ஜிபிடி இந்தாண்டு 3.2 சதவீதம் வளரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்து உள்ளது. அடுத்து 2023ஆம் ஆண்டில் வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இது கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட கணிப்பைக் காட்டிலும் 0.2% குறைவாகும்.

சர்வதேச பொருளாதாரம்
கடந்த 2001ஆம் ஆண்டிற்குப் பின்னர் சர்வதேச பொருளாதாரம் இந்தளவுக்குப் பலவீனமாக இருப்பது இதுவே முதல்முறையாகும். சர்வதேச பணவீக்கம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 9.5%ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வரும் ஆண்டுகளில் அது மெல்லக் குறைந்து 2024ஆம் ஆண்டு பணவீக்கம் 4.1%ஆகக் குறையும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் வளரும் நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி 6.8%ஆக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என்று கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜனவரியில் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

காரணம்
2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) இந்தியாவின் வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. இது தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும்" என்று கூறப்பட்டு உள்ளது. இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வளர்ச்சி குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டு உள்ளது.

உலக நாடுகள்
அமெரிக்கா இந்த ஆண்டு 1.6 சதவிகிதமும், சீனா 3.2 சதவிகிதம் மட்டுமே வளரும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து உள்ளது. இந்தாண்டைக் காட்டிலும் அடுத்தாண்டு தான் பொருளாதார வளர்ச்சி மோசமாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 2023கான வளர்ச்சி 1% ஆக மட்டுமே இருக்கும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications