அன்று சைரஸ் மிஸ்திரி.. இன்று ரிஷப் பண்ட்..! ரொம்பவே ஆபத்தானதாக மாறும் இந்திய சாலைகள்! என்ன பிரச்சினை
டெல்லி: மகாராஷ்டிராவில் சைரஸ் மிஸ்திரி, இப்போது ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் பல லட்சம் சாலை விபத்துகள் நாட்டில் நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட். சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டிகளில் பண்ட் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
வங்கதேச தொடர் முடிந்ததும் டெல்லி திரும்பிய பண்ட் ப்ரோமோஷன் உட்பட பல்வேறு பணிகளுக்காக உத்தரகண்ட் சென்றிருந்தார். இன்று அதிகாலை அவர் தனது சொகுசு காரில் டெல்லி திரும்பிய நோக்கி வந்துள்ளார்.

பண்ட்
வட இந்தியப் பகுதிகளில் இப்போது குளிர்காலம் என்பதால் அங்கு அதிகாலை நேரத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இன்று காலை பண்ட் தனது பிஎம்டபிள்யூ காரை வேகமாக ஓட்டிவந்த நிலையில், பனிமூட்டம் காரணம் எதிர்பாராத விதமாக அவரது கார் சாலை தடுப்பில் மோதி உள்ளது. உடனடியாக கார் தீப்பிடித்த நிலையில், காரின் ஜன்னலை உடைத்து அவர், வெளியே வந்து உயிர் தப்பியுள்ளார். தற்போது மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள அவர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பலரும் வேண்டி வருகின்றனர்.

சைரஸ் மிஸ்திரி
கடந்த சில மதங்களுக்கு முன்பு, இதேபோலத் தான் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி. மாகராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கினார். அவரது தோழி ஒருவர் காரை ஓட்டிய நிலையில், பின்னால் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு நபரும் உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவம் மட்டுமில்லை. இந்தியாவில் இதுபோல ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் நாம் பல ஆயிரம் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம்.

அதிகரிக்கும் விபத்துகள்
கடந்த 2021ஆம் ஆண்டும் இந்தியாவில் நாம் 1.53 லட்சம் பேரை விபத்துகளில் இழந்துள்ளோம். அதிலும் குறிப்பாக சீட் பெல்ட் அணியாத காரணத்தினால் மட்டும் 16,397 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச அளவில் அதிக விபத்துகள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் விபத்துகளை ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்றால், மறுபுறம் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதும் சவால் மிகுந்த ஒன்றாக மாறியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் பலருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போவது உயிரிழப்புகள் அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது.

சீட் பெல்ட்
மகாராஷ்டிராவில் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்த விபத்தில், அவர் பின்னால் அமர்ந்திருந்துள்ளார். அவரும் அவருடன் உயிரிழந்த நபரும் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. இதுவே அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. இன்று பண்ட் சீட் பெல்ட் அணிந்திருந்ததே அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பண்ட் சென்ற கார் எப்படித் தீப்பிடித்தது எனத் தெரியவில்லை. பென்ஸ் நிறுவனம் இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. அமெரிக்காவைப் போல இல்லாமல், இந்தியச் சாலைகள் பெரும்பாலும் நெரிசல் மிகுந்ததாகவே இருக்கும்.

பாதசாரிகள்
அப்படியிருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் செல்லும் வகையிலான வாகனங்களை கார் நிறுவனங்கள் எதற்காக வடிவமைக்கின்றன என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதிவேகத்தில் செல்லும் கார்களால் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பாதசாரிகளும் தான் ஆபத்தில் தள்ளப்படுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் மரணம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியச் சாலைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் 25,858 பேர், அதாவது மொத்த விபத்துகளில் 17.1% பாதசாரிகள் உயிரிழந்து இருந்தனர். இது கடந்தாண்டு 29,124ஆக அதிகரித்துள்ளது.

டூவீலர்கள்
கடந்த 2021இல் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரில் 45.1%, அதாவது 69,635 பேர் டூ வீலரில் சென்றவர்கள் என்பது அதிர்ச்சி தகவலாகவே உள்ளது. டூ வீலர் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியாததே உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது. இந்த 69,635இல் கிட்டதட்ட 47,000 பேர் ஹெல்மெட் அணியவில்லை. உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5,888 பேர் உயிரிழந்துள்ளனர்.

என்ன காரணம்
அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவதும் ஹெல்மெகட் அணியாமல் இருப்பதும்தான், விபத்திற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இது தவிரத் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து சிக்னல்களைத் தாண்டுதல் போன்றவை விபத்துகள் ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன. பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலே போதும், பெரும்பாலான விபத்துகளை நாம் தவிர்க்கலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications