தேர்தல் காலங்களில் பாமக ஆடும் "அது.. இது.. எது" ஆட்டம்! என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
டெல்லி: பாஜக மற்றும் பாமக இடையே கூட்டணி இறுதியாகி இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் பாமக யாருடன் எல்லாம் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் கடந்த வந்த பாதை என்ன என்பதைப் பார்க்கலாம்.
பாமக கடந்த 1988ஆம் ஆண்டில் தான் முதல்முறையாக அரசியல் கட்சியாகத் தொடங்கப்பட்டது. அதற்கு அடுத்தாண்டு அதாவது 1989இல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமக கலந்து கொள்ளவில்லை. வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது.

அடுத்து சில மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 33 தொகுதிகளில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் பாமக தோல்வியடைந்த போதிலும் 6% வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
முதல் வெற்றி: அதன் பிறகு 1991 தேர்தலிலும் பாமக தனித்துத் தான் போட்டியிட்டது. முஸ்லிம் லீக் கட்சி, குடியரசுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி உடன் பாமக கூட்டணி அமைத்து. அப்போது சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் ஒன்றாக நடந்த நிலையில், பாமக 199 சட்டசபை தொகுதிகளிலும் 31 லோக்சபா தொகுதிகளிலும் களமிறங்கியது. ராஜீவ் படுகொலையின் அனுதாப அலையால் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இருந்தாலும் பண்ருட்டி தொகுதி போட்டியிட்ட பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அதில் வென்றார்.
"தேசிய நலன்.." பாஜக உடன் கூட்டணி அமைக்க உண்மையில் என்ன காரணம்.. வெளிப்படையாக பேசிய பாமக பாலு!
தனித்து போட்டி: 1996இல் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியை திமுக உருவாக்கி இருந்தது. இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பாமக திவாரி காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டது. பாமக 116 இடங்களில் களமிறங்கிய போதிலும் அவர்களால் 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இதற்கிடையே மத்தியில் தேவகவுடா ஆட்சி கவிழவே 1998இல் லோக்சபா தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்த நிலையில், அதிமுகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது பாமக. அதில் 5 தொகுதிகளில் 4இல் வென்றது பாமக.. இருப்பினும், சில மாதங்களில் மத்தியில் ஆட்சி கவிழவே 1991 மீண்டும் நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் திமுக பக்கம் வந்தது பாமக, புதுச்சேரி சேர்த்து 8 இடங்களில் களமிறங்கிய பாமக 5இல் வென்றது. இதையடுத்து பாமகவின் என்.டி.சண்முகம், இ.பொன்னுசாமி அமைச்சராகினர்.
முறிந்த கூட்டணி: தொடர்ந்து 2001இல் சட்டசபைத் தேர்தல் சமயத்தில் மீண்டும் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக பக்கம் வந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக. இருப்பினும். அதன் பிறகு சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. கோட்டையில் ஜெயலலிதாவை சந்திக்க ராமதாஸ் சென்ற போது அவரை ஜெயலலிதா சந்திக்கவில்லை என்றும் அதுவே இந்த கூட்டணி முறிவுக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
2004இல் காங்கிரஸ்- திமுகவின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்ற 6 இடங்களில் வென்றது. அதன் பிறகு ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றத்திற்குச் சென்ற ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார். இதையடுத்து நடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார். அதில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவால் வெறும் 18 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
மாறிய கூட்டணி: தொடர்ந்து 2008இல் திமுகவுடன் கூட்டணி முறிந்த பாமக, அடுத்தாண்டு அதாவது 2009இல் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் கைகோர்த்தது. அங்கே அவர்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதிலும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இங்க ஆரம்பித்த பாமகவின் சரிவு அதன் பிறகும் தொடர்ந்தது. 2011இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு பாமக திரும்பியது. அதில் 30 இடங்களில் பாமக போட்டியிட்ட போதிலும் 3 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
2014இல் நடந்த லோக்சபா தேர்தலில் தான் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுத்தது. திமுக, அதிமுக என இரு கூட்டணியிலும் இணையாத பாமக தேசிய கட்சியான பாஜக உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. அதில் 8 இடங்களில் போட்டியிட்ட பாமகவால் ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. அன்புமணி ராமதாஸ் மட்டும் தருமபுரியில் வென்றார்.
தனித்து போட்டி: அதன் பிறகு 2016இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாமக முழுக்க முழுக்க தனித்து அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக என்று மாறி மாறி தேர்தலை எதிர்கொண்ட பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இரு கட்சிகளுக்கும் எதிராக அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரம் செய்தார். மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்துடன் தேர்தலை எதிர்கொண்டார்கள். அதில் 5% வாக்குகளைப் பெற்ற போதிலும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
அதன் பிறகும் திமுக, அதிமுகவை கடுமையாகவே விமர்சித்து வந்தன. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை மிகக் கடுமையாக எதிர்த்தால் அன்புமணி. இந்தச் சூழலில் தான் 2019 லோக்சபா தேர்தலில் மீண்டும் அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டிற்கு பாமக வந்தது. கூட்டணி குறித்து அன்புமணி நடத்திய பிரஸ் மீட்டில் அவரை நோக்கி சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், அதிலும் ஒரு இடத்திலும் பாமகவால் வெல்ல முடியவில்லை.
2021இல் தேர்தல் சமயத்தில் நீண்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக உடன் கூட்டணி அமைத்து. 23 இடங்களில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. அதன் பிறகு நடந்த நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக தனித்து போட்டியிட்ட போதிலும் பெரியளவில் வெல்ல முடியவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்











Click it and Unblock the Notifications