Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தேசிய நலன்.." பாஜக உடன் கூட்டணி அமைக்க உண்மையில் என்ன காரணம்.. வெளிப்படையாக பேசிய பாமக பாலு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக பாமக இடையே கூட்டணி இறுதியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக பாமகவின் பாலு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

What is the reason behind PMK and BJP alliance explains PMK leader Baalu


தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

பாமக கூட்டணி: இதில் பாமக எந்தக் கூட்டணிக்குச் செல்லும் என்பதில் சஸ்பென்ஸ் இருந்தது. அந்த சஸ்பென்ஸ் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்கும் என்று நேற்று வரை சொல்லப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக பாமக அறிவித்துள்ளது. இதை அக்கட்சியின் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்தார்.

"பாஜக உடன் கூட்டணி அமைக்கும் பாமக!" அதிகாரப்பூர்வ தகவல்- ஒரே நாளில் மொத்தமாக மாறிய அரசியல் களம்


பாமக தலைமையில் இருந்து விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே பாமக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலு சில முக்கிய தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாலு, "உயர்மட்ட குழுக் கூட்டமும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. தேர்தல் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

என்ன காரணம்: அவர் அறிவிப்பை வெளியிட்ட பிறகே தொண்டராக அது குறித்து என்னால் கருத்துச் சொல்ல முடியும். தேச நலன் கருதி, நாட்டு நலன் கருதி, பாமக தொண்டர்கள் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும். இந்த முடிவு சிறந்த முடிவாக இருக்கும். லோக்சபா தேர்தல் என்பதால் தேசிய நலன் கருதி முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்,

பாமகவை பொறுத்தவரைக் கடந்த சில நாட்களாகவே கூட்டணி குறித்த தெளிவான முடிவை எடுக்க முடியாமல் குழப்பி எடுத்து வந்தது என்றே சொல்லலாம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிமுக உடன் கூட்டணி வைக்கவே விருப்பம் தெரிவிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் 2 முறை ராமதாஸை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்பட்டது,

என்ன நடந்தது: அதேநேரம் ராமதாஸின் மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்குத் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் அவர் டெல்லி வரை கூட சென்று பாஜக உடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்லப்பட்டது. இதனால் யாருடன் கூட்டணி என்பதில் தெளிவு இல்லாத ஒரு சூழலே இருந்தது.

இந்தச் சூழலில் தான் நேற்றைய எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏ அருள் சந்தித்தார். இதையடுத்து அதிமுக பாமக கூட்டணி இறுதியாகும் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் ட்விஸ்ட் கொடுத்த பாமக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எத்தனை இடங்களில் பாமக போட்டியிடும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+