இந்து திருவிழாக்களை சீர்குலைக்க தொடரும் சதி.. கும்பமேளாவிலும் தொடர்கிறது
டெல்லி: இந்துக்களின் திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. அப்படி கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிலர் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரக்யராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தப்தி – கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பயணிகள் மீது மகாராஷ்டிரா அருகே தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து பண்டிகைகளை குறிவைத்து நடைபெறும் வன்முறைகள் பதற்றத்தை அதிகரித்து கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரக்யராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. மகா கும்பமேளா திருவிழா உலகளவில் கவனம் ஈர்த்த நிகழ்வு. இதில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பல பெட்டிகள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக பிரதமர், ரயில்வே அமைச்சர் ஆகியோரிடம் தங்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க சொல்லி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த சம்பவத்தை நினைவு கூறும் பயணி ஒருவர், கும்பமேளாவுக்காக புறப்பட்ட முதல் பக்தர்கள் ரயில் இதுதான். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.
கற்களை வீசி ரயில் பெட்டிகளை உடைத்தனர். கொஞ்சம் விட்டிருந்தாலும் கடுமையான காயம் ஏற்பட்டிக்கும். அதனால் அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும். என்றார். இது ஏதோ முதல்முறை நடத்தப்படும் தாக்குதல் அல்ல. இதேபோல கடந்த 2024 ஆம் ஆண்டு அயோத்தி கோயில் உள்ளிட்ட சில நிகழ்வுகளின்போதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர்.
2002 மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பிய கோத்ரா ரயில் எரிக்கப்பட்டு 59 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்துக்களின் பண்டிகை மீது வேண்டுமென்றே பிரிவினை ஏற்படுத்த தாக்குதல் நடத்தப்படுவது கவலையளிக்கிறது. ராம் நவமி, அனுமன் ஜெயந்தி, துர்கா பூஜை என்று பல திருவிழாக்கள் மீது தொடர்ந்து வன்முறை நடத்தப்படுகிறது.
கடந்த 2024 அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ராய்ச் பகுதியில் இந்து மதம் சார்ந்த பண்டிகையில் கலந்து கொண்டு திரும்பிய 22 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டதாகவே விமர்சனம் வைக்கப்படுகிறது.
சில அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு வங்கிக்காக இந்துக்களின் பண்டிகையில் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் புகார் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மொகரம் பண்டிகைக்காக துர்கா பூஜை கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது சர்ச்சையானது.
இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும் விஷயமாக உருவெடுத்துள்ளது. ரயில் பாதைகளில் ஆக்கிரமிப்பும் கவலையளிப்பதாக உள்ளது. அங்கிருந்து தான் சமூக விரோத நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. பாரபட்சம் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மகா கும்பமேளா விழா என்பது மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் நாட்டின் பெருமை மிகு அடையாளமாக உள்ளது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொள்வார்கள். இது வெறும் பயணிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications