Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமாரசாமி முதல்.. மனோகர்லால் கட்டார் வரை.. முதல் முறையாக மத்திய அமைச்சர்கள்? யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடியின் 3.O அமைச்சரவையில் குமாரசாமி முதல் மனோகர்லால் கட்டார் வரை பல புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை வென்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பாஜகவிற்கு கிடைக்கவில்லை. 240 இடங்களில் மட்டுமே பாஜக வென்றதால் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கிறது.

narendra modi bjp oath ceremony nda cabinet ministers

இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை பிடித்தது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியை சந்தித்து ஆசி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மாலை 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்றார்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், நேபாள பிரதமர் பிரசந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, மொரீஷியஸ் அதிபர் பிரவிந்த் குமார் ஜெகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோபே ஆகிய 7 நாட்டு தலைவர்கள் பதவியேற்றனர். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் சாகர் திட்டத்தின் அடிப்படையில் இந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மோடி பதவியேற்றதை அடுத்து அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்படி, பாஜக தேசிய தலைவரான ஜேபி நட்டாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதேபோல் முன்னாள் முதல்வர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், குமாரசாமி உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடுவும் அமைச்சராக பதவியேற்றார். இதில், புதுமுகங்கள் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுக்கபட்டுள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

* மனோகர் லால் கட்டார்:
ஹரியானா முன்னாள் முதல்வரான மனோகர் லால் கட்டார் இன்று மத்திய அமைச்ச்ராக பதவியேற்றுக்கொண்டார். கடந்த மார்ச் மாதம்தான் திடீரென முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நயாப் சிங் சைனி முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பிறகு கர்னால் தொகுதியில் நிறுத்தபட்ட மனோகர் லால் கட்டார் வெற்றி பெற்றார். அதிலும், 2,32,577 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

* குமாரசாமி:
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி, இந்த முறை மோடி அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் குமாரசாமியின் ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 17 இடங்களிலும், ஜனதாதளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் குமாரசாமிக்கு இந்த முறை மோடி அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

* சிவராஜ் சிங் சவுகான்:
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங் சவுகான், மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். விதிஷா லோக்சபா தொகுதியில் 8.21 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்த போதும் அவருக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மத்திய அமைச்சராக்கப்பட்டு உள்ளார்.

* ஜெயந்த் சவுத்ரி:
உத்தர பிரதேசத்தின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி முதல் முறையாக மத்திய அமைச்சராகி உள்ளார். உத்தர பிரதேசத்தில் பெரும் பின்னடவை பாஜக சந்தித்த நிலையில், கூட்டனிகட்சியை சேர்ந்தவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

* ஜித்தன் ராம் மாஞ்சி:
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி இன்று மோடி அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக ட்வீட் போட்ட ஜித்தன் ராம் மாஞ்சி பீகார் மற்றும் காயா மக்களுக்கு ஒரு குட் நியூஸ் இருக்கிறது' என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

* ராம் மோகன் நாயுடு:
ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேச கட்சியின் எம்பி ராம் மோகன் நாயுடுவுக்கு பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மோடியின் அமைச்சரவையிலேயே இளம் வயது அமைச்சராக ராம் மோகன் நாயுடு விளங்குகிறார். ஸ்ரீககுளம் லோக்சபா தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளார்.

* லாலன் சிங் (ஜேடியு)
* சிராக் பாஸ்வான் (எல்ஜேபி)
* பாண்டி சஞ்சய் குமார் (பாஜக)
* ராம் நாத் தாக்கூர் (ஜேடியு)
* சந்திரசேகர் பெம்மாசானி (TDP)

* சுரேஷ் கோபி (பாஜக)
* பிரதாப் ராவ் ஜாதவ் (சிவசேனா)
* வி சோமண்ணா (பாஜக)
* கீர்த்தி வர்தன் சிங் (பாஜக)
* கமலேஷ் பாஸ்வான் (பாஜக)

* சதீஷ் சந்திர துபே (பாஜக)
* சுகந்த மஜூம்தார் (பாஜக)
* ரவ்நீத் சிங் பிட்டு (பாஜக)
* அஜய் தம்தா (பாஜக)
* ஜித்தின் பிரசாத் (பாஜக)

* ஹர்ஷ் மல்ஹோத்ரா (பாஜக)
* அன்னபூர்ணா தேவி (பாஜக)
* சஞ்சய் சேத் (பாஜக)
* ரக்‌ஷா காட்சே (பாஜக)
* துர்காதாஸ் யுகே (பாஜக)

* பகீரத் சவுத்ரி (பாஜக)
* பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா (பாஜக)
* ஜார்ஜ் குரியன் (பாஜக)
* பபித்ரா மார்கெரிதா (பாஜக)
* சாவித்ரி தாக்கூர் (பாஜக)
* தோகன் சாஹு (பாஜக).

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+