ஹிண்டன்பர்க் முதல் அதானி பிடிவாரண்ட் வரை நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்ய வைகோ வலியுறுத்தல்
டெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை முதல் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது வரையிலான அதானி குழும மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைகோ இதனை வலியுறுத்தினார்.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. இதில் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் மின் கொள்முதல் ஒப்பந்தம் பெற அதிகாரிகளுக்கு ரூ.2200 கோடி கொடுத்ததாக அதானி குழுமம் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் லஞ்ச வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, இந்த லஞ்ச வழக்கில் அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கவுதம் அதானி மற்றும் அவரது மருமகனும், அதானி கிரீன் நிர்வாக இயக்குநருமான சாகர் அதானி ஆகியோருக்கு இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.

“இந்த சம்மன் அனுப்பப்பட்ட 21 நாட்களுக்குள் சிவில் நடைமுறைகளின் கூட்டாட்சி விதிகள் 12ன் கீழ் நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்றும், “பதிலளிக்கத் தவறினால், புகாரின் மீதான தீர்ப்பு ஆதானி குழுமத்திற்கு எதிராக அமையும்” என்றும், லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதானி குழுமத்தினருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை இந்த சம்மன் தொடங்குகிறது” என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்திய அரசுக்குச் சொந்தமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் மின்சாரம் மற்றும் சூரிய சக்தி உற்பத்திக்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் சில மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர்கள் (ரூ. 2,200 கோடி) லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை முதல் இந்திய எரிசக்தி நிறுவனம் மீதான புரூக்ளினில் உள்ள நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முக்கியமான பிரச்சினையை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்றும், நிதி அமைச்சர் இது குறித்து விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications