காந்தியை கொன்ற "கோட்சே" தேச பக்தர்.. சர்ச்சையை கிளப்பிய பிரக்யா தாக்கூர்.. பாஜக லிஸ்டில் மிஸ்ஸிங்
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ள நிலையில், அதில் சில முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முதற்கட்ட வேட்பாளர் லிஸ்டில் சில முக்கிய தலைவர்கள் பெயர்களும் இடம்பெறவில்லை. கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அப்படி இந்த லிஸ்டில் மிஸ்ஸான 5 முக்கிய தலைவர்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பிரக்யா தாக்கூர்: இதில் முக்கியமானவர் சாத்வி பிரக்யா தாக்கூர். அவர் கடந்த முறை மத்தியப் பிரதேச போபால் தொகுதியில் போட்டியிட்டார். 2019 லோக்சபா தேர்தலின் போது, சாத்வி பிரக்யா தாக்கூர் 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங்கை தோற்கடித்திருந்தார்.
இந்த பிரக்யா தாக்கூர் தான் நாடாளுமன்றத்திலேயே மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று அழைத்தவர். இந்த முறை அவருக்குப் பதிலாக அலோக் ஷர்மாவை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
ரமேஷ் பிதுரி: தற்போது ரமேஷ் பிதுரி தெற்கு டெல்லி தொகுதியில் இருந்து எம்பியாக இருப்பவர். கடந்த 2019 தேர்தலில் இவர் ஆம் ஆத்மியின் ராகவ் சாதாவை சுமார் 3.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார்.. ஆனால் இந்த முறை அவருக்குப் பதிலாக ராம்வீர் சிங் பிதுரி என்பவரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
பர்வேஷ் வர்மா: மேற்கு டெல்லி தொகுதியில் இருந்து, சிட்டிங் எம்பியாக உள்ளவர் தான் இந்த பர்வேஷ் வர்மா. இவர் கடந்த 2019 தேர்தலில் 5.78 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தார். ஆனால், இந்த முறை அவருக்குப் பதிலாக கமல்ஜீத் செஹ்ராவத்வுக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் மேயரான கமல்ஜீத் சஹ்ராவத், உள்ளூரில் வலுவான தலைவராக அறியப்படுகிறார்.
மீனாட்சி லேகி: இந்த லிஸ்டில் சப்ரைஸ் மிஸ்ஸிங் என்றால் அது மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி. அவர் கடந்த முறை புது டெல்லி தொகுதியில் 2.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். ஆனால், இந்த முறை அவருக்குப் பதிலாக சுஷ்மா சுவராஜின் மகள் சுஸ்ரீ பன்சூரி ஸ்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பன்சூரி சுவராஜ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார்.
ஹர்ஷ் வர்தன்: அதேபோல முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் இந்த லிஸ்டில் மிஸ்ஸிங்... கடந்த முறை இவர் சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து வென்றிருந்தார். கொரோனாவை கையாண்ட விதத்தில் மக்களிடையே அதிருப்தியைப் பெற்ற இவர், அப்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். இப்போது இவருக்கு நாடாளுமன்றத் தேர்தலிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாகத் தொழிலதிபர் பிரவீன் கண்டேல்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஐந்து முக்கிய தலைவர்களும் முதற்கட்ட லிஸ்டில் மிஸ்ஸிங். இருப்பினும், அடுத்தடுத்து வெளியாகும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இவர்களில் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications